பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 சரஸ்வதிக்கும் ஒரு தனிக்கோயில் உண்டு. இந் த ச ர ஸ் வ தி யே கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தனுக்கு அருள் புரிந்தவள் எ ன் ற வரலாறும் உண்டு. ஆனால் இந்த மக்ாலக்ஷ்மிக்கு என்று தனிக் கோயில் தமிழ் நாட்டில் இல்லைதான். எங்கெல்லாம் மகாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கின்றாரோ அங்கெல்லாம் அவரது நிழலில் அவரது துணைவியாக இந்த மகாலக:மியும் பல பெயர்களில் உருவாகி இருக்கின்றாள். மகாவிஷ்ணு தான் ஏகபத்தினி விரதன் அல்லவே. ஆகவே இந்த மகாலக்ஷமியும் பூதேவி, பூரீதேவி, ஆண்டாள் முதலிய தன் சக்களத்தி மார்களுடனேதான் குடியிருக்க வேண்டியவளாக இருக் கிறாள். ஏதோ பட்டமகிஷி என்ற காரணத்தால் ஒரு தனி இடத்தை அவளுக்கு ஒதுக்கியிருப்பார்கள். அவ்வளவு தான். ஆனால் இந்த மராத் தியரிடையே அவளுக்குத் தனித்தொரு செல்வாக்கு. கோலாப்பூரில் தனிக்கோயில் கொண்டிருந்தாலும் நிறைந்த புகழுடனும், மிக்க அருளுடனும் அவள் வாழ்வது பம்பாயில்தான். அங்கு தானே மகாலகrமிக்கு என்று ஒரு பெரிய கோயில், மகாலகடிமி என்ற பெயரிலேயே ஒரு ரயில்வே ஸ்டேஷன், மகாலகடிமி என்ற பெயரிலேயே ஒரு ரேஸ்கோர் ஸ், எல்லாம் இருக்கின்றன. குதிரைப் பந்தயம் என்றால் பணம் எவ்வளவு புரளும், எப்படி எப்படி எல்லாம் ஒடும் என்றுதான் தெரியுமே. மகாலக்ஷ்மியின் கடைக்கண் நோக்கும் பலருக்கு மாறி மாறி வரும், போகும். நாமும் இந்த மகாலகrமியின் அருள் பெற வேண்டாமா. பம்பாய் செல்வதற்கு நமக்கு எத்தனையோ காரணங்கள் இருக் கலாம் என்றாலும் நமது தலயாத்திரையில் இந்த மகாலகடியை வணங்குவதற்கென்றே பம்பாய்க்கு ஒரு நடை போகலாம். அங்குதான் செல்கிறோம் நாம் இன்று. பம்பாய் செல்வதற்கு நான் வழிதுறைகள் எல்லாம் செல்ல வேண்டியதில்லை. ரயிலில் செல்லலாம், காரில் செல்லலாம், இல்லை ஆகாய விமானம் மூலமாகவும்