பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வேறுள் குருஸ்னேஸ்வரா இராமாயணத்தில் சுந்தர காண்டம் மிகவும் சுவை யானது. இலங்கையில் அசோகவனத்தில்,சிறையிருந்த சீதை யைக் கண்டு விட்டுத் திரும்பி வருதிறான் அனுமன் கிஷ்கிந்தைக்கு. அங்கு வந்து ராமனிடம் தான் சீதையைக் கண்டுவந்த செய்தியைத் தெரிவிக்கிறார். ராமனது மனைவி என்னும் உரிமைக்கும் தசரனது மருமகள் என்ற பெருமைக்கும், ஜனக மகாராஜனது மகள் என்ற தகைமைக் கும் ஏற்றவளாக சீதை சிறையிருக்கிறாள் என்று சொன்ன அனுமார் அவளைத்தன் பெருந் தெய்வம் என்றே குறிப் பிடுகிறான். இப்படி அவளைத் தெய்வம் என்று அனுமன் வாயிலாகப் பாராட்டிய கம்பனுக்கு, அத்தெய்வத்திற்கு ஒரு கோயில் கட்டிப் பார்க்கவேண்டும் என்றே தோன்றி விருக்கிறது அதனால் மேலும் பாடுகிறான். வேலையுள் இலங்கை என்னும் விரிங்கர் ஒருசார் விண்தோய் காலையும் மாலை தானும் இல்லதோர் கனகக் கற்பச் சோலை அங்கு அதனுள் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையுள் இருந்தாள் ஐய! தவம் செய்த தவமாம் தையல் என்பது அவனது பாட்டு. இப்பாட்டை ராஜராஜன் கேட் டிருக்கிறான், தஞ்சையில் பெருவுடையாருக்கு கோயில் எழுப்பிட முனைந்த போது. ஆகவே முதலில் ஒர் அகழி, அகழிக்குள் ஒரு மதில். மதிலுக்குள் ஒரு பிரகாரம். அந்தப் பிரகாரத்திற்குள் ஒரு மண்டபம். அந்த மண்டபத்திற்குள் ஒரு கருவறை என்று அமைத்து அக் கருவறையில்.