பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 வாகி இருப்பார்கள். இந்த விகாரத்தில் 60-அடி சதுரமுள்ள பெரிய ஹாலும் அதைத் தாங்கி நிற்கும் 28 தூண்களும் உண்டு. 6-வது குடைவரை மாடியோடு கூடியது. இங்கும் ஒரு புத்தர். இக்குடைவரையில் ஒரே ஒரு பக்கத்துச் சுவர் மட்டுமே சித்திரம் தீட்டப் பெற்றிருக்கிறது. 7-வது குடை வரையில் முன்பு நல்ல சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். இன்று எஞ்சியிருப்பவை குறிப்பிடக் கூடியதாக இல்லை. 8-வது குடைவரை மற்ற குடைவரைகளை விடத் தாழ்ந்த இடத்தில் இருப்பதால் அ தி ல் பெரும் பகுதி தூர்ந்துபோய் இருக்கிறது. 9-வது குடைவரை 10-வது குடைவரை இரண்டும் சைத்தியங்கள், இவை இங்குள்ள குடைவரைகளில் காலத்தால் முற்பட்டவை என்று கணக்கிடுகிறார்கள். இங்கு முதலில் சுவரில் தீட்டிய சித்திரங்கள் மேலேயே திரும்பவும் சித்திரம் தீட்டியிருக் கிறார்கள். இங்கு நாக மன்னர்கள், அவர்கள் தலைமீது, விரிந்திருக்கும். பாம்புக்குடைகளும் திட்டப்பட்டிருக் கின்றன. இவைதான் முதன் முதல் தீட்டிய சித்திரங்கள். பின்னரே புத்தரது சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. 10-வது குடைவரை அளவில் பெரியதுதான். அங்கு சாம. ஜாதகக் கதைகள் சாதாந்த சாதகக் கதைகள் இவைகள் சித்திரங்களாக உருவாகி யிருக்கின்றன. இக்கதைகளில் உள்ள காட்சிகள் தொகுத்துக் கூறும்வகையில் இருக்க வில்லை. மிகவும் சிதைந்து போய் இருக்கும். இப்படியே 11, 12, 13, 14, 15, குடைவர்ைகள் எல்லாம். ஆதலால் விறு விறு என்று 16-வது குடைவரைக்கே போகலாம். இக் குடைவரையின் வராந்தாவில் உள் ள விதானத்திலே இரண்டு கந்தருவக் காதலர்கள். ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு வானுலகில் பறக்கின்ற காட்சி சிற்பவடிவில் இருக்கும். ஆடவனது தோளில் ஒயிலாகச் சாய்ந்து .ெ க | ண் டு அந்தக் கந்தருவப் பெண்பறந்து செல்வதே அவர்கள் புதியதொரு காதல் உலகத்தில் சஞ்சரிக்கின்றவர்கள் என்பதைக் காட்டும். இங்துதான் நந்தன் முடிதுறந்து பெளத்த பிrஆன கதை முழுவதும்