பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. நந்தன் துறந்த முடியை ஏந்திவரும் அரண்மனைச் சேவகனைக் கண்டு மயங்கி விழும் நந்தன், மனைவி சுந்தரி எல்லாம் அழகாக உருவாகி கயிருக்கிறார்கள். இன்னும் பல ஜாதகக்கதைகள் சித்திரங் களாக உருவாகி இருக்கும் இங்கே. இவற்றையெல்லாம் விட்டு 17-வது குடைவரையில் துழைந்ததால்தான் அஜந்தா பெண்கள் பலரைக் காணும் வாய்ப்புக் கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னால் இக் குடைவரையே அஜந்தாவின் அந்தப்புரம் ஆகும். இக்குடை வரையின் வாயிலிலே இரண்டு அப்சரஸ்களை நாம் சந்திப் போம். இருவரும் இரண்டு மரங்களில் பேரில் நின்று கொண்டிருப்பர். இந்த வாயிலைக் கடந்து உள்ளே துழைந்தர்ல் இங்குதான் அஜந்தா சித்திரங்கள் அழியாத நிலையில் காக்கப்பட்டு வந்திருக்கின்றன என்று தெரியும். இங்குள்ள சித்திரங்களில் சிறப்பானவை பல. ஒர் அரசிளங் குமரனும், குமரியும் இணைந்து உட்கார்ந்திருப்பர் ஒரு பக்கத்தில். இந்த இளங்குமரி உட்கார்ந்திருக்கும் கோலமே மிக்க கவர்ச்சியாக இருக்கும். குமரனோ கையில் ஒரு ம்துக்கிண்ணத்தை ஏந்தி அதை குமரியிடம் கொடுத்து இருந்தும்படி சொல்லிக் கொண்டிருக்கும் பாவனை. இந்தச் சித் திரத்தை அடுத்து இந்த அரசிளங்குமரனும் குமரியுமே அரண்மனை வாயிலை நோக்கிச் செல்லும் காட்சியும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாயிலில் அரசிளங் குமரன் பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை இடுகிறார். இக் கூட்டத்தில் உள்ள பிச்சைகாரிகூட அழகுடையவளாகத் தான் இருக்கிறாள். இதே குடைவரையில் அஜந்தா சித்திரங்களில் பிரசித்திப் பெற்ற அலங்காரக் கலையில் சடுபட்டிருக்கும் பெண்கள் நால்வரையும் பார்க்கிறோம். மத்தியில் நிற்பவர் குறைந்த உடையையும் நிறைந்த அணிகளையும் அணிந்து நிற்கும் அலங்காரவல்லி, கையிலே ஒரு பெரிய கண்ணாடியை ஏந்தி நிற்கிறாள். அவள் திற்கிற ஒயிலே மிக்க கவர்ச்சியாக இருக்கிறது. அவள்