பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 9 குறுக்களவு 50 அடி உயரம் 27 அடி. இதனை 1851-ம் வருஷமே அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். அப்போதே இது சிதைந்திருக்கிறது. இங்குதான் புத்தரின் பிரதம மாணவர் களாகிய சாலிபுத்திரர், மகா மெளத் கல்யாயனர் முதலிய வர்களது அஸ்திகள் அடங்கிய கற்பெட்டிகள் இருந்திருக் கின்றன. இந்த கற்பெட்டிகளை எடுத்து அடக்கம் செய்து அதன் பேரில் ஒரு புதிய விகாரத்தைக் கட்டி இருக்கின்றனர். பெரிய ஸ்தூபியின் தெற்கு வாயிலின் நேர் எதிரே சைத்திய மண்டபம் ஒன்றிருக்கிறது. அதற்கு கிழக்கே குப்தர் கோயில் ஒன்றிருக்கிறது. பெரிய ஸ்தூபியின் மேற்கு வாயிலின் முன்னால் அசோகரின் மனைவியால் கட்டப்பட்ட இருமண்டபங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் பெளத்த பிக்ஷாக்கள் தங்குவதற்காகக் கட்டப் பட்டிருக்கின்றன. குன்றின் மேற்குச் சரிவில் பாதி வழியில் உள்ள பாறையின் மேல் மற்றொரு ஸ்தூபி இருக்கிறது. இதனையே இரண்டாவது ஸ்து பி என்பர். இது அளவில் மிகச் சிறியது. குறுக்களவு 39 அடிதான். உயரமும் 22 அடிதான். இதற்குத் தோரண வாயில்கள் இல்லை. ஸ்து பியின் மேல் தளத்திலும் குடையோ பெட்டியோ இருக்காது. மொட்டையாகவே இருக்கிறது. ஸ்து பியைச் சுற்றி கல் அளி மாத்திரம் உண்டு. அளியின் பெண் தேவதைகள், இறக்கையுள்ள சிங்கங்கள், குதிரைத்தலை, மீன் தலையுடைய மனிதர்கள், யானைகள் என்று பல வகையான உ ரு வ ங் க ள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. குன்றின் அடிவாரத்தில் மேற்கு பக்கத்தில் சிறிய ஸ்து பி ஒன்றும் இருக்கிறது. இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். இங்கு பெளத்த போதகர்கள் கச்யபன், மெளதல்ய புத்திரன் முதலியவர்களின் அஸ்திகள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இங்குள்ள அளியும் தோரண வாபிலும் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளவை. காஞ்சியில் ஐந்து விகாரங்கள் காணப்படுகின்றன. ஆதியில் இவை மரத்தால் கட்டப்பட்டிருக்கின்றன. அவை அழிந்து