பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 உள்ள கோயில்களில் எல்லாம் இந்தக் கோயிலில்தான் பக்தர் கூட்டம் அதிகம். இதனை அப்பக்கத்தில் உள்ள வர்கள் எல்லாம் ரங்க்ஜி கோயில் என்றுதான் அழைக் கிறார்கள். இதே ஷேட்ஜி பிருந்தாவன்த்திலும், ஹெளரா விலும் இதே போன்று இன்னும் இரண்டு கோயில்களைக் கட்டி முடித்திருக்கிறார். அங்கு செல்லும்போது அவற்றை மறவாது பார்த்துக் கொள்ளலாம். வழுதி நாட்டிடை வளவன் நாடு உற்றது போன்று சோழவந்தான் இருக்கிறது என்று பாடினார் ஒரு புலவர். ஆம் ராஜபுதனத்தில் ஒரு தமிழ் நாடு உருவாகியிருக்கிறது. இது எல்லாம் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் முயற்சிதானே என்று தமிழன் பெருமைப்படலாம். -