பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377 உருப்பெற்றிருக்கிறது. ஆனால் இலங்கைதான் அவனுடைய லட்சிய சுவர்க்கமாக இருந்திருக்கிறது. அங்கு களிக் கின்றவர்களைத் தவிர கவல்கின்றவர் ஒருவரையும் கம்பனால் காணமுடியவில்லை. அவனது வர்ணனையில் இலங்கையில் உள்ள மாடமாளிகைகள் எல்லாம் ஒளிவீசு கின்றன. மாடம் அடங்கலும் கற்பகம், மனை எலாம் ஜகத் சிரோமணி கோயில் கனகம் என்றெல்லாம் சொன்னவனே மேலும், அங்குள்ள மாளிகைகள் எப்படி, எதனால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணி எண்ணிப்பார்த்து கடைசியில் முடியாமல் கையை விரித்து விடுகிறான். o 27 38–24