பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 புறத்தில் இருக்கிறது. அங்கு பலப்பல சமாதிகள் சத்ரி என்று அழைக்கின்றனர். எல்லாம் வெள்ளைச் சலவைக்கற்களால் எழுப்பப்பட்ட அழகான மண்டபங்கள். ஜெய்ப்பூரை உருவாக்கிய ராஜாஜெய்சிங்கின் சத்ரிதான் கிறந்த சிற்பவேலைப்பாடு உடையதாய் இருக்கிறது. அழகான டோம் ஒன்றும் அதனை அணிசெய்கிறது. அங் குள்ள துரண்களில் எல்லாம் அழகான பெண்கள் நடனக் கோலத்தில் நிற்கிறார்கள். ராஸ்லீலா முழுவதையுமே சித்தரித்திருக்கிறார்கள். மொத்தம் அங்கிருப்பது 13 சத்ரி கள். அடிப்பாகங்கள் சிவப்பு சலவைக்கல்லால் கட்டப்பட்டு, மேல்பாகத்தை வெள்ளை சலவைக்கல்லால் அலங்கரித் திருக்கின்றனர். கால்டா ஜெய்ப்பூருக்கு கிழக்கே உள்ள மலைச்சரிவில் இருக்கிறது. அங்கு சூரியனுக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார். காலவரிஷியிலிந்து தவம் செய்த இடம் என்கின்றார்கள். என்ன ஜெய்ப்பூரில் சூரியனை தவிர வேறு தெய்வங் களுக்கு கோயில்களே இல்லையா என்றுதானே கேட்கி நீர்கள். மற்ற தலங்களில் கண்டதுபோல் பெரிய கோயிலாக ஒன்றுகூட இல்லை என்றாலும் சில கோயில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவைகளில் முக்கிய மானவை, ஆறு. சந்த்பால் என்ற பகுதியிலே அனுமன் கோயில் ஒன்று இருக்கிறது. இதனை சந்த்பால் காபாலாஜி என்று மக்கள் போற்றி வணங்குகிறார்கள். இதற்குப் பக்கத்திலேயே பாலனந்தாஜி காமந்திர் என்று ஒரு கோயில். இது ஒரு விஷ்ணு கோயில். மகாராஜா ஜெய்சிங்கின் குருவான பாலாதாஸ் பெயரில் அமைக்கப் பட்டது என்பது வரலாறு. இன்னும் விநாயகருக்கு ஒரு பெரிய கோயில், கத்தார் கேட் பக்கம் இருக்கிறது. இதை கணேஷ் கோயில் என்கிறார்கள். இன்னும் கிரிதர்ஜி ஒன்றும், கோவிந்த்தேவ்ஜி கோயில் ஒன்றும் கண்ணனுக்கு என்றே கட்டப்பட்டு கண்ணன் வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் விட அதிசயம்,