பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 பிரபலமான அம்பர் அரண்மனை இருக்கிறது. இங்குதான் ஜெய்சிங்கின் முன்னோர்களாக கச்சவாஸ் என்பவர்கள் ஆண்டிருக்கிறார்கள். அம்பர். என்பது சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்றான அம்பிகேஷ்வர் பெயராலேயே ஏற்பட்டது என்பர். இல்லை அயோத்தி மன்னனான அம்பரீஷன் அமைத்த காரணம்தான் அம்பர் எனப்பெயர் பெற்றது என்பர். ஆறு நூறு ஆண்டுகாலம் ஜெய்சிங்கின் முன்னோர்கள் இங்கிருந்து ராஜ்யபாரம் செய்திருக் கின்றனர், கச்சவாஸ் அரசர்கள்-ராமனுடைய மகனான குசனது வம்சத்தார் என்பது வரலாறு. குசனே கச்சன் என்று. மருவியிருந்திருக்கிறது போலும், அம்பர் அரண் மனை ராஜபுத்திர மன்னர்கள் கட்டிடக்கலையில் அடைந் திருந்த தேர்ச்சிக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு, 7-ம் நூற்றாண்டின் முற்பகுதி பில் ராஜாமான்சிங் கட்ட ஆரம்பித்த இந்தக் கோட்டையும் அரண்மனையும் ஜெய்சிங்கின் காலத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டிருக் கிறது. ஒரு நூற்றாண்டாக நினைந்து நினைந்து கட்டிய கோட்டையும் மாளிகையும் அது, வளைந்து வளைந்து செல்லும் பாதையில் விதானம் அமைத்த வாயில்கள் இருக்கின்றன. இவைகளில் பிரதான் வாயில் சிங்போல் என்பதாகும். அதைக் கடந்துதான் திவானி ஆம். இங்கு தான் மன்னர் குடிகளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். இதையும் கடந்து சென்றால் ஒரு பெரிய காளி கோயிலில் வந்து நிற்போம். இது முழுக்க முழுக்க வெள்ளைச் சலவைக் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் வாயில் கதவுகள் எல்லாம் வெள்ளித் தகடு பொதிந்து மிக்க வேலை பாடுகளுடன் விளங்குகிறது. வாயிலின் இருபுறமும் இரண்டு பெரிய வாகை மரங்கள். தூரத்திலிருந்து பார்த் தால் இரண்டு பசிய மரங்களை வெட்டி எடுத்து வந்து நாட்டியிருக்கிறார்கள் என்று எண்ணுவோம். பக்கத்தில் சென்றால் அவ்வளவு பசுமையாகக் காணும்படி சலவைக் கல்விலே செதுக்கி வண்ணம் தீட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். இந்தக் கோயிலில் கோயில் கொண்