பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 காயாகவே கடித்துத் தின்னலாம். சுவையாக இருக்கும். சரி, சரி, இந்த இலந்தைப் பழங்களை தின்றே பாண்டவர் கள் ஒரு வருஷத்தை இங்கு கழித்துவிட்டுப் போய்விட்டார் கள் போலிருக்கிறது. நம்மால் அப்படி அஞ்ஞாத வாசம் பண்ண இயலாது இங்கு. விரைவாக காரைச் செலுத்தி இருட்டுவதற்குள்ளேயே டில்லி சென்று சேருவோம். எவ்வளவுதான் விரைவாகச் சென்றாலும், நம் உள்ளம் மட்டும் ஜெய்ப்பூரிலேயே தங்கி நின்றுவிடும். ஊர்வந்து சேர்ந்தோம். ஆனால் உளம்வந்து சேரக்காணோம்' என்றே பாடத்தோன்றும். அத்தனை அழகுவாய்ந்த நகரம் ஜெய்ப்பூர்.