பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பக்கம் அனுமனும், மறுபக்கம் விநாயகனும் நிற்பர். இந்த லட்சுமி நாராயணன் கோயிலுக்கு வடபுறத்தில் காளிக்கும், இடப்பக்கத்தில் சிவனுக்கும் தனித்தனி சந்நிதிகள், இவர்களை எல்லாம் வலம் வந்து பின்புறம் உள்ள திறந்த வெளிக்குச் சென்றால் அதை ஒரு பூங்காவாக அமைத்திருக் கிறார்கள். அங்கே கீதா போதகனான கண்ணன் இருப் பான். அங்குள்ள புலிக்கு கை தடாகம் எல்லாம் கடந்து சென்றால் மேற்கு வாயிலை அடைவோம். அந்த வாயிலைத் தமிழ் நாட்டுக்கோபுரம் ஒன்றும் அழகு செய்யும். இனி தென்பக்கம் திரும்பினால் அங்கு அசோகன், விக்கிரமாதித்தன், பிரிதிவிராஜ் எல்லாம் சிலை உருவில் காட்சி கொடுப்பர். இன்னும் இரண்டு யானைகளும் தும்பிக்கையை உயர்த்திக் கொண்டு சிலை உருவில் நிற்கும். அதற்கும் தென்புறம்தான் புத்தர் பெருமானுக்கு ஒரு கோயில், அதன் சிகரம் புத்தகயையில் உள்ள சிகரம் போலவே இருக்கும். அங்குள்ள சுவர்களில் எல்லாம் தம்ம பதத்திலிருந்து வாக்கியங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். பிரார்த்தனை செய்வதற்கு உரிய பெரிய பிராத்தனைக் கூடமும் இருக் கும். பிரதான கோயிலுக்கு வடபுறம் தான் கீதாமந்திரும் தர்மசாலையும் இருக்கும். தர்மசாலையில் டில்லி செல்லும் அன்பர்கள் மூன்று நாட் கள் இலவசமாகவே தங்கலாம். ஆனால் இடம் கிடைப்பது தான் கஷ்டம். கீதாமந்திரிலே எந்நேரமும் பாராயணமும், பஜனையும் நடக்கும். நாழும் சென்று அமைதியாக இருந்து பஜனையில் கலந்து கொள்ளலாம். இந்த பிர்லாமந்திரில் எல்லாம் சலவைக்கல்லில்தான் தெய்வத் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குச் சென்று ஒரு. மணி நேரம் தங்கியிருந்து திரும்பும்போது கோயிலுக்குச் சென்று திரும்புவது போல் இராது. தமிழ் நாட்டுக் கோயில் களில் உள்ள சாந்நித்யம் இராது. ஏதோ உல்லாசமாகப் பொழுது போக்க ஒரு பங்களாவிற்குச் சென்று வந்த உணர்ச்சியே இருக்கும் என்றாலும், சைவம், வைஷ்ணவம் சாக்தம், பெளத்தம் முதலிய எல்லா சமயங்களும் இணைந்