பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். டில்லியிலே நாம் சீக்கிய சகோதரர்கள் பலரை சந்தித்திருப்போம். கருகரு என்று தாடிவளர்த்து தலைப்பாகையுடன் சிங்கம் போல் கம்பீரமாக நடக்கும் இந்த சீக்கியர்களை கண்டு வியந்திருப்போம். எனக்கு ஒர் ஆ ைச அந்தத் தல்ைப் பாகைக்குள் என்ன இருக்கிறது என்று அறிய ஒரு சீக்கிய நண்பரை மிகவும் தாஜாப்பண்ணி அவர் தலைப்பாகையை அவிழ்த்துக்காட்டச் சொன்னேன். அதில் இருந்தவை என்ன தெரியுமா? ஒரு சீப்பு, ஒரு கத்தி (கிர்பான் என்று பெயர்) நீண்டகேசம், இவைதவிர கையில் ஒரு வளையும் அரையில் ஒரு கச்சமும் அணிந்திருப்பர், சீப்பு தூய்மையை யும் கிர்ப்ான் ஆன்ம சக்தியையும் கேசம் தியாகத்தையும் குறிக்கிறதாம். கைவலை நேர்மைனயயும் கச்சம் புளனடக் கத்தையும் குறிக்குமாம். இத்தனையும் நிறைந்த ஒரு நல்வாழ்வு வாழ்வதற்காகவே சீக்கிய மதத்தை குருநானக் என்பவர் துவக்கியிருக்கிறார். இந்து மதத்தினை ஒரு பிரிவாகவே இந்த சீக்கிய மதம் வளர்ந்திருக்கிறது. குருநானக் 15-ம் நூற்றாண்டில் பிற்பகுதியிலே பிறந்து வாழ்ந்தவர். காசியிலிருந்து மக்காவரைக்கும் காஷ்மீரத்தி லிருந்து இலங்கைவரைக்கும் பிரயாணம் பண்ணியிருக் கிறார். சாதி சமய வேறுபாடுகள் பொருளற்றவை என்றும் எல்லோருக்கும் ஈசன் ஒருவனே. அவனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து அவனருள் பெற்று அவனை அடை வதே மனிதப்பிறவியின் பயன் என்றுதான் அவர் உபதேசித் தார். இத்தகைய மதம் ஒன்றையே நானக்குக்குப்பின் வந்த சீக்கிய குருமார் ஒன்பது பேர் வளர்த்திருக்கின்றனர். வட நாட்டில் நடந்த இந்து முஸ்லீம் போர்களில் எல்லாம் சீக்கியர்கள் அஞ்சாது போர் புரிந்திருக்கிக்கின்றனர். இவர்கள் முஸ்லீம்களோடு திராப்பகையுடையவர்கள் என்ற எண்ணம் வலுத்துவிட்டது, அதில் முழு உண்மை இல்லாவிட்டாலும் கூட ஆங்கிலேயரோடு பல போர்கள் நடத்தியிருக்கின்றனர். சில போர்களில் வெற்றி கண்டிருக் கினறனர். இந்த சீக்கியர் நல்ல போர்வீரர்களாகவே