பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 இல்லையா என்றுதானே கேட்கிறீர்கள். நிறைய இருக் கிறது. புத்தமதம் அசோகர் காலத்தில் அங்கு வேர் ஊன்றியது என்று முன்னமேயே சொல்லியிருக்கிறேன். ஆகவே புத்த விஹாரங்களும் சைத்தியங்களும் பல அங்கே தோன்றியிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும் பாலானவை இன்று மண்மூடிப்போய் விட்டன. சில இடிந்தும் போயிருக்கின்றன. என்றாலும், இத்தனை இடி பாடுகளுக்கும் மிஞ்சி இன்று இருப்பது கும்பா என்னும் புத்த விஹாரம்தான். அதுவும் ஒரு உயரமான மலைச் சரிவிலேயே கட்டப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வாரச் சுவர்களிலும் மற்ற இடங்களிலும் அஜந்தாவில் உள்ள சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களும், பறவைகளும், செடி கொடிகளும், புஷ்பங்களும், மனிதர் கள், தேவர்கள், நாகர்கள் முதலிய சித்திரங்களும் வரைந் திருக்கின்றனர். அதில் ஒரு சித்திரம் ந்ம் கவனத்தைக் கவர்வதாக இருக்கும். மரத்தின் மேல் ஒரு காகம், அது ஒரு கனியைப்பறித்து கீழே நிற்கும் யானையின் முதுகில் ஆரோகணித்து இருக்கும் முயலிடம் கொடுக்கிறது. முயலோ அந்தக் கனியை யானையிடம் கொடுக்கிறது. யானையும் அக்கணியை வாங்கி தன் பக்கத்தில் நிற்கும் மனிதனிடம் கொடுக்கிறது. எவ்வளவு தன்னலத் தியாகம் இந்த பறவை களுக்கும் மிருகங்களுக்கும். மேலும், மனிதன் மிருகங் களையும், பறவைகளையும் எல்லாம் இப்படி பரஸ்பரம் அன்புகாட்டி வாழக் கற்றுக் கொள்வதுதானே புத்தர் காட் டிய அஹிம்சா நெறி. இந்த நெறியை விளக்கும் அரிய சித்திரத்தை நான் வேறெங்கும் காணவில்லை. அந்த கும்பா என்னும் விஹாரத்தில் புத்தர் சிலை இருக்கிறது, வேறுபல தேவர்கள் சிலைகளும் இருக்கின்றன. கோயி லுள்ளே தானிக்’ என்னும் பட்டுக்கொடி கொண்டு அழகு செய்திருக்கின்றார்கள். .ெ ப ள த் த சந்தியாசிகளும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் ஓம் மணிபத்தே ஓம், என்றும் எப்போதும் மந்திரம் ஒதிக்கொண்டே இருக்கின் றார்கள். இக்கோயிலைச் சுற்றி சமசதுரமாக அமைத்த பீடங்களும் சமாதிகளும் இருக்கின்றன.