பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433 இந்த அமரநாதர் எப்போதும் இருப்பவர் இல்லை. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று உருப்பெற ஆரம்பிப்பார். நாளும் வளர்வார். பெளர்ணமியன்று பூரணப் பொலிவோடு நல்லகாத்திரமான சிவலிங்கவடிவில் தோன்றுவார். மறுநாள் முதல் வடிவம் சிறிது சிறிதாய் குறையத்தொடங்கும். அமாவாசைக்கு முந்திய தினம் தேய்ந்து மறைந்து விடுவார். கடவுள் உருவம் அருவம் அருவுருவம் உடையவர் என்று சைவசித்தாந்தம் சொல் கிறதே, அதற்கேற்ப அருவமாக இருக்கும் அவர், உருவம் பெறுவதும் அருவுருவமாக தோன்றுவது விந்தையிலும் விந்தையே" . ஆகஸ்ட் மாதத்து பெளர்ணமிதான் அமர் நாதரைச் சென்று தரிசிக்க நல்ல காலம். - அமரநாதர் தரிசனத்தோடு நமக்கு அவர் தரும் காட்சி நிறைபெறவில்லை. பறவைகளே வாழ இயலாத அந்த உறை பனியுடைய குளிர் பிரதேசத்தில் இரண்டு புறாக்கள் வாழு கின்றன. பூரணப்பொலிவுடன் அமரநாதர் உருப்பெற்றதும் இரண்டு புறாக்கள் பறந்து வந்து அக்குகையிலே காட்சித் தரும். அப்போது அன்று திருவையாற்றிலே அப்பர் கண்ட கைலாயக்காட்சி நமக்கு ஞாபகம் வரும். ஏரிப் பிறைக்கண்ணியானை ஏந்திழை யாளொடும் பாடி முரித்த விலயங்கள் இட்டு முகமலர்ந்து ஆடாவருவேன் அரித் தொழுகும் வெள்ளருவி ஐயாறு அடைகின்ற போது வரிக்குயில் மேடையோடாடி வைகிவருவன கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். என்று நம்மை மறந்து நாம் பாடினால் அதிசயம் இல்லைதான்.