பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமையை அடைதல்,

உண்மையும், நம்பிக்கையும், தயாளமும், அன் பும் நிறைந்திருக்கின்ற அகத்திற்கு மாத்திரம் மெய் யான வலிமை கொடுக்கப்படுகின்றது. இக்குணங் களைக் கொண்டிராத அகமானது வலிமையை அறிய முடியாது ; ஏனெனில், வலிமை, சுகத்தைப் போல வே, ஒரு புற உடைமை யன்று ; ஓர் அக அநுபவம். பேராசையுள்ள மனிதன் ஒரு கோடீசுவரனாகலாம் ; ஆனால், அவன் எப்பொழுதும் துன்பமுள்ளவனாக வும், இழிஞனாகவும், எளியவனாகவும் இருப்பான் ; தன்னினும் மிகுந்த செல்வமுள்ள ஒருவன் உலகத் தில் இருக்கிறவரையில் தன்னைப் புறத்திலும் எளியவ னென்றே அவன் நினைத்துக்கொண்டிருப்பான். ஆனால், நேர்மையும், உதாரமும், அன்பு முள்ள மனி தர் தமது புற உடைமைகள் கொஞ்சமாயிருந்த போதிலும், அஷ்ட ஐசுவரியங்களுக்கு முரிய வலி மையை அடைந்திருப்பர். அதிருப்தி உடையவ னே எளியவன் ; தனக்குக் கிடைத்துள்ளவற்றில் திருப்தி உடையவனே வலியவன்." தனக்குக் கிடைத் துள்ளவற்றோடு தயாளமுள்ளவனா யிருப்பவனே அதிக வலிமையுள்ளவன். பிரபஞ்சத்தில் ஜடமும் சித்துமாகிய சகல நல்ல பொருள்களும் நிறைந்திருக்கின்ற விஷயத்தை நாம் சிந்தித்து, அதனோடு மனிதன் சில தங்க நாணயங் களையோ சிலகாணிப் புழுதி நிலங்களையோ சம்பாதிக் கக் கொள்ளும் குருட்டுத்தனமான ஆசையை நாம் 106