பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பின் மௌன வலிமை. அதிக பலத்தோடு வந்து சேர்கின்றன. ஆனால், அமைதியும் தூய்மையும், பரநயமு முள்ள நினைப்புக் கள் உங்கள் அகத்தினின்று வெளிப்பட்டு உலகத்தி லுள்ள தீய சக்திகளைக் கெடுத்து, உலகத்திற்கு ஆரோக்கியத்தையும், க்ஷேமத்தையும், இன்பத்தை யும் கொடுக்கும் நன்மையாகிய தெய்வத்தின் தூதர்; அவை கவலையாலும் துக்கத்தாலும் வருந்துகின்ற மனத்திற்கு அமைதியையும் சுகத்தையும் தொடுத்து, அழிந்து போன உள்ளங்களுக்கு அழியாத்தன்மை யைத் திரும்பக் கொடுக்கின்றன. நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள் ; அவை - உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளின் உருக் களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் ஆத்ம சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி, திருத்திக்கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர் கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரண மாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்கு முள்ள வித்தியாசம், உண்மையான பலத்தையும் நிலையான சாந்தி யையும் அடையவேண்டினால், தன்னை அடக்குதலையும் தன்னை ஆள் தலையும் தன்னைச்சுத்தப்படுத்து தலையும் தவிர வேறு மார்க்கமே யில்லை. நீங்கள் உங்கள் மனம் போன போக்கில் செல்லுதலானது உலகத்தில் 61 - -