பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொன்போல் ஒளி மிகும்-சுடுங் காலையில் ஒளிரும் பொன்போல (அறிவாகிய) ஒளி மிகும். அகலம். மூத்திய உரையாசிரியர்கள் பாடம் 'ஒளிவிடும். மணக்குடவர் பாடம் ‘சுடச்சுடப் பொன்போல' 'ஒளிவிரும் என்பதினும் 'ஒளியிகும்' என்பது மிகப் பொருத்தமான பொரு த் தருதலான், அவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. கருத்து. தவம் செய்வார்க்கு அறிவு வளரும்.. தன்னுயிர் தான்றப் பெற்றானை யேளைய மன்னுயி ரெல்லாந் தொழும். 237. பொருள். தன் உயிர் தான் அற பெற்றானை - தனது உயிர் 'தான்' என்பது நீங்கப் பெற்றவளை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும்- மற்றைய நிலை பேறுடைய உயிர்கனெல்லாம் வணங்கும். அகலம். தான்-'தான்' என்று அகங்கரித்தல், 'தன் உயிர் . தான் அறப் பெற்றானை' என்பதற்குத் 'தன் உவிரைத் தான் தன க்கு உரித்தாகப் பெற்றவனை' என்ற உரை பொருந்தாது. கருத்து. அகங்காரம் நீங்கப் பெற்றவன் கடவுளாகப் போற்றப் படுவான். கூ கூற்றங் குதித்தலுங் கைகூடு சோற்றலி னாற்ற தலைப்பட் டவர்க்கு. 238. பொருள். கோத்தலின் ஆற்றல் தனைப்பட்டவர்க்கு-தவம் இழைத்தலின் வலிமையை அடைந்தார்க்கு, கூற்றம் குதித்தலும் கைகூடும்- கூற்றத்தைக் (கடந்து) குதித்தலும் எய்தும். அகலம். கூற்றத்தைக் கடந்து குதித்தலாவது, கூற்றத்தி ளின்று தப்புதல். கூற்றம் - எமன். கருத்து. தவத்தைச் செய்தவர் மரணத்தைக் கடப்பர், 239.

240.

240