விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2

மூலநூல் இல்லா எழுத்தாக்கங்கள் தொகு

வணக்கம் தகவல் உழவன் மூல நூல் பக்கங்கள் இல்லாமல் காபி பேஸ்ட் செய்யப்பட்டு விக்கி மூலத்தில் உருவாக்கபட்டுள்ள நூல்களான கல்கியின் பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி, தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, மகுடபதி, மோகினித் தீவு போன்ற நூல்களும், உ.வேசா.வின் என் சரித்திரம் போன்ற பல ஆசிரியர்களின் நூல்கள் முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டன. இவை மூல நூல்களைக் கொண்டவையாக இல்லாமல் இருப்பதால் ஒருவகையில் குறைபாடுகள் கொண்ட பக்கங்களாக இருக்கின்றன. எனவே இதுபோன்று மூல நூல்கள் அற்ற மூல மின்நூல்களை தமிழ் இணையக் கல்விக் கழகம், நூலகம் திட்டம் போன்றவற்றால் இருந்து தரவிறக்கி விக்கிமூலத்தில் ஏற்றி ஏற்கனவே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு உருவாக்கபட்ட பக்கங்களைக் கொண்டு மிக எளிதாக அந்த நூல்களை மூல நுல்களைக் கொண்டவையாக மாற்றி உருவாக்குவது மிகவும் அவசியமான பணியாகும். அது தமிழ் விக்கிமூலத்தின் தரத்தை மேம்படுத்துவதாக அமையும். எனவே அவ்வாறான நூல்களையும் பட்டியலிட்டு அந்த நூல்களின் மூலப் பக்கங்களை தேடி எடுத்து விக்கி மூலத்தில் ஏற்றுவதையும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கொள்ளலாம் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 09:05, 2 அக்டோபர் 2023 (UTC)Reply

வணக்கம். அருளரசன். இது குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். தற்போது மாற்றியமைக்கப்பட்ட இக்கருவியில் கூட நாம் இந்திய மொழியில் பின்னணியில் இருக்கிறோம். அதற்கு நீங்கள் கூறியதே காரணம். ஆனால் உரிய நூலினை இணையத்தில் தேடவேண்டும். பின்பு அதனைத் தானியக்கமாக இணைக்க முடியமென நம்புகிறேன். எனவே இணையத்தில் கிடைக்கும் ஏதேனும் நூலினை பரிந்துரை செய்யுங்கள். பிறரையும் நாடுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 01:41, 3 அக்டோபர் 2023 (UTC)Reply

படிப்படியாக மூல நூல்கள் இல்லாத பக்கங்களில் மூல நூல் அட்டவணைகளைச் சேர்க்கவேண்டும். அப்போதே தமிழ் விக்கி மூலத்தின் தரம் பிற சமூகங்களின் மத்தியில் உயரும். ஏதேனும் ஒரு நூலை பரிந்துரை செய்யக் கேட்டதால் என் சரித்திரம் நூலை முதலில் பரிந்திரைக்கிறேன். தமிழிணையக் கல்விக் கழகத்தி உள்ள அதன் உரலி --கு. அருளரசன் (பேச்சு) 05:59, 3 அக்டோபர் 2023 (UTC)Reply

நன்றி. நம்மிடம் உள்ள தரவோடு ஒப்பிட்டு பார்க்கலாமா? பொருத்தமாக இருந்தால் தொடர்ந்து நூலினையும், தரவினையும் நாம் இணைக்கத் தொடங்கலாம். தகவலுழவன் (பேச்சு). 00:53, 4 அக்டோபர் 2023 (UTC)Reply
@அருளரசன், @Info-farmer - கல்கியின் நூல்கள் நாட்டுடைமை நூல்கள் பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி, தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, மகுடபதி, மோகினித் தீவு வரிசையிலானவை. எனவே இதில் சிக்கல்கள் ஏதுமில்லை. விரைவாக அடுத்தகட்டப் பணியினைத் தொடரலாம்.--TVA ARUN (பேச்சு) 09:12, 10 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:21, 10 அக்டோபர் 2023 (UTC)Reply
நீங்கள் (கு. அருளரசன் ) தொடங்கிய இதனின் திட்டப்பக்கம்: விக்கிமூலம்:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் மேம்படுத்தும் திட்டம் Info-farmer (பேச்சு) 02:58, 23 மே 2024 (UTC)Reply

திட்ட தேதி மாற்றம் தொகு

பதிவேற்றப் பரிந்துரை தொகு

  1. சுவடி_இயல்.pdf
  2. TVA_BOK_0039269-சுவடி_இயல்.pdf
  3. TVA_BOK_0018225_காகிதச்_சுவடி_ஆய்வுகள்.pdf
  4. TVA_BOK_0002868_சுவடிப்பதிப்பு_நெறிமுறைகள்.pdf இந்த நூல்கள் ஆய்வாளர்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றையும் பதிவேற்றுங்கள்.நேயக்கோ (பேச்சு) 04:18, 21 மே 2024 (UTC)Reply
    பதிவேற்றியுள்ளேன். இங்கும் அட்டவணையின் அடித்தளங்களை ஏற்படுத்தியுள்ளேன். இணைந்து மேம்படுத்துவோம். கோப்பின் அளவு மிக அதிகமாக இருந்தத. மின்னூல் தர அளவுக்கு மாற்றி இங்கு ஏற்றியுள்ளேன். சுருக்கமாகச் சொன்னால், 1GB அளவிருந்த கோப்புகள், 300MB அளவாக மாற்றி பக்க ஓரங்களைச் செதுக்கி, சரிபார்த்து ஏற்றியுள்ளேன். பரிந்துரைத்தமைக்கு நன்றி. Info-farmer (பேச்சு) 03:02, 22 மே 2024 (UTC)Reply
Return to the project page "தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2".