அட்டவணை பேச்சு:என் பார்வையில் கலைஞர்.pdf

@Balajijagadesh:! இந்நூலை மறுமுறை எழுத்துணரியாக்கம் செய்ய இரவி வேண்டுகோளை, என்க்கும், சீனிக்கும் மின்னஞ்சலில் விடுத்துள்ளார். காரணம் யாதெனில், முன்பை விட கூகுள் எழுத்துணிரியாக்கத் தரவு சீராக இருக்கும் என்றுரைத்தார். அவரின் நண்பர் இந்நூலை மெய்ப்புப் பார்க்க விரும்பியதால், சோதனைக்கு பத்து பக்கங்களை, மீண்டும் எழுத்துணிரியாக்கம் செய்துள்ளேன். (எ-கா) இது குறித்த உங்களின் பார்வையைக் கூறிடக் கோருகிறேன்.-- உழவன் (உரை) 03:22, 22 மே 2018 (UTC)Reply

  1. நான் ஏறத்தாழ ஒரு மணிநேரம் தரவு வேறுபாடுகளை ஒப்பிட்டு பார்த்தேன். மறுமுறை எழுத்துணரியாக்கம் செய்வதை விட, மெய்ப்புப் பார்த்து விடலாமென்றே எண்ணுகிறேன். எனவே, இந்நூலுக்கு அத்தகைய முயற்சி வேண்டாமென்பது எனது முடிவு.-- உழவன் (உரை) 03:27, 22 மே 2018 (UTC)Reply
    இந்தப் பக்கத்தின் தலைப்பு "பூனை" என்று வர வேண்டியது எழுத்துணரியால் "ஆனை" என்று வந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ... என்று மூன்று புள்ளிகள் அடுத்தடுத்து வருவது .. என்று இரண்டு புள்ளிகள் மட்டுமே வருகிறது. இவையெல்லாம் மீண்டும் புதிதாக கூகுள் டிரைவில் இட்டுப் பதிவேற்றும் போது சரியாகப் பதிவேறுகிறது. இந்தச் சோதனையைச் செய்து பார்த்த பிறகு தான் மீண்டும் எழுத்துணரி கொண்டு உரையேற்ற முடியுமா என்று உதவி கேட்டேன். இதில் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. தங்களால் இயலாது என்றால் நான் வேறு யாரும் உதவக் கூடுமா என்று பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 23:00, 22 மே 2018 (UTC)Reply
    நான் மேலே கூறியது போல, முதல் பத்து பக்கங்களையே நான் பதிவேற்றியுள்ளேன். நீங்கள் கூறிய எடுத்துக்காட்டு பக்கத்தரவினை, வழங்கியில் எடுத்துப் பார்த்தேன். உங்கள் கூற்று மிகச்சரியே. ஒப்பனை எழுத்துக்களையும், கூகுள் மென்பொருள், சரியாகவே புரிந்து கொள்கிறது. நீங்கள் ஆய்ந்தது எனக்குத் தெரியாது. மேலே நீங்கள் தெரிவித்ததை, முன்பே தெரிவித்து இருந்தால், நானும் ஆய்ந்து இருக்க மாட்டேன். இனி யார் எந்த நூலை மெய்ப்புப் பார்க்கத் தொடங்கினாலும், அதனை மீண்டும் எழுத்துணரியாக்கம் செய்தளிப்பேன். எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. விக்கியில் வேறாக இருப்பது எனது நோக்கமல்ல. எனக்குப் புரிந்தால், எந்த முயற்சிக்கும் வேராக இருப்பேன். -- உழவன் (உரை) 06:37, 23 மே 2018 (UTC)Reply
@Balajijagadesh:, தகவல் உழவன் செய்த மாற்றங்களை உறுதி செய்தீர்கள் என்றால் மெய்ப்பு பார்க்கும் பணியை தொடங்கி விடுவோம். அட்டவணைப் பக்கத்தில் முன்பு பக்க எண்களுக்குப் பின்னே வண்ணம் இருந்தது. இப்போது இல்லை. இது பரவாயில்லையா? வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து விடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 16:59, 1 சூன் 2018 (UTC)Reply
@Ravidreams: @Info-farmer: //அட்டவணைப் பக்கத்தில் முன்பு பக்க எண்களுக்குப் பின்னே வண்ணம் இருந்தது. இப்போது இல்லை. இது பரவாயில்லையா?// அது ஒரு வழு. phabricator இல் பதியப் பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. எண்களுக்கு பின் வண்ணம் வர சில முறை reload செய்யவேண்டும். தானியக்கத்தில் என்னால் மேலடியை சரிசெய்ய முடியவில்லை. ஏனென்றால் பழைய ocr இல் பக்கத்தின் தொடக்கத்திலேயே மேலடி தகவல் இருந்தது. இப்பொழுது புதிய ocrஇல் ஒவ்வொரு பக்கத்திலும் வேறு வேற அளவில் newline character உள்ளது. சில பக்கங்களில் ஒன்று, சில பக்கங்களில் நான்கு. தகவலுலவன். மீண்டும் ocr newline characterஇல்லாமல் செய்ய இயலுமா? எடுத்துக்காட்டு https://ta.wikisource.org/s/6u7y -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:00, 5 சூன் 2018 (UTC)

மேலடி குறித்து தொகு

  • மேலடிகளைத் தற்போது ஏற்படுத்தியுள்ளேன். மேலடி கீழடி நிரல்களை, அட்டவணையை உருவாக்கும் நிரலுக்கு உள்ளேயே பொதிய செய்யலாம். ஏனெனில், பல முறை அக்குறியீடுகள் எழுதுவதைத் தவிர்க்கலாம். இணைய வேகம் குறைவாக இருந்தமையாலும், புதிய கற்றல் என்பதால் 4 மணி நேரம் ஆகியது. அதைவிட, மெய்ப்புப் பகுதியை மூன்றாக பிரித்தது போல, மேலடி, கீழடி அமைப்புகளையும் மூன்றாக பிரிக்க வேண்டும். முடிந்த வரை குறியீடுகள் ஒரு பயனர் இடுவதை குறைக்க வேண்டும் அல்லது எளிமையாக வேண்டும். மேலும், இடப்பக்கம் வரும் பட்டி மறையும் வசதி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. அதனை இங்கு மேம்படுத்தி அமைக்க வேண்டும்.
  • ஒரு புதிய பயனரைப் பேணுதலுக்கு தேவையானவைகளைக் குறித்த தெளிவு ஏற்பட்டது. தானியங்கி கொண்டு இதனை அமைப்பது எளிதாகப் படவில்லை.ஏனெனில், இது நூலுக்கு நூல், நூலின் உட்பிரிவுகளுக்கு ஒப்ப வேறுபடுகிறது. அதனால் அமைப்பு அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
  • பயனர்களின் கணிய நினைவிகளை நீக்க (purge ), ஆங்கில விக்கிமூலத்தில் 2,3 வசதிகள் உள்ளன. அவற்றை செயற்படுத்தினால், பக்கங்களின் நிற மயக்கம் தோன்றாதென்று எண்ணுகிறேன். மேலும், அங்குள்ள பல வசதிகளைக் குறித்து ஆய்தல் வேண்டும். இதனை ஒட்டுமொத்த இந்திய விக்கிமூலத்திற்கும் ஏற்படுத்த இரவி திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். விக்சனரியிலும் இதே தேவை இந்திய முழுமைக்கும் உண்டு. மேலும், பொதுவகத்தில் ஒரு பக்கத்தினை முன்தோற்றம் காணும் போதே, ஒரு வரி தொடங்கும் போது, இடைவெளி இருந்தால் அது தானாகவே சீராகி விடும்.

-- உழவன் (உரை) 13:56, 5 சூன் 2018 (UTC)Reply

பங்களித்தோர் புள்ளிவிவரம் தொகு

Nethania Shalom (பேச்சு) 17:03, 4 பெப்ரவரி 2023 (UTC)

Return to "என் பார்வையில் கலைஞர்.pdf" page.