அண்ணாவின் பொன்மொழிகள்
உள்ளடக்கம்
- முத்தமிழ் ஓங்குக!
- இலக்கியப் புரட்சி!
- சமூகப் புரட்சி!
- உழைப்பாளர் இனம் ஓங்குக!
- இளைஞர் ஏறுகள்!
- கலைப் புரட்சி!
- பேச்சுக்கலை!
- காந்தி அண்ணல்!
- உரிமை வேட்கை!
- பல்சுவை!
அண்ணாவின்
பொன்மொழிகள்
மறைமலையான்
- முதற்பதிப்பு 1969.
- திருநாவுக்கரசு தயாரிப்பு
- விலை ரூ. 2.00
- பாரதம்பிரஸ், சென்னை - 17.
பதிப்புரை
தமிழுக்காகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த உழைப்புக்கள் கணக்கிலடங்காதவை. அறிஞர் அண்ணா அவர்கள் தமது பெரிய எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் சேவை செய்துள்ளார்கள். அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் அடங்கியுள்ள பொன்மொழிகளில் சிலவற்றைச் சிறப்பான முறையில் ஆசிரியர் மறைமலையான் தொகுத்துத் தந்திருக்கிறார். தமிழ்மக்கள் இந்நூலினைப் பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறோம்.
—பதிப்பாளர்.
காணிக்கை
சந்தனப் பெட்டிக்குள் உறங்கும் சிந்தனைச் செம்மல் அண்ணன்-அறிஞர் திலகம் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய, அனுதினமும் அஞ்சலி செலுத்தி வரும் நல்ல உள்ளங்களுக்கு இச் சிறு நூல் காணிக்கை.