பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/656: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:




இந்நாடகத்தில் கௌதம புத்தராக நடிக்கும் ஆக்டருக்கு முக்கியக் கஷ்டம் என்னவென்றால் “ஹாம்லெட்" என்னும் நாடகத்தில், “ஹாம்லெட்"டின் பாகம்போல், இந்நாடகத் தில் முதற்காட்சி முதல் கடைசிக் காட்சி வரையில், இடையில் இளைப்பாறச் சாவகாசமின்றி, ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் வர வேண்டுமென்பதே.
இந்நாடகத்தில் கௌதம புத்தராக நடிக்கும் ஆக்டருக்கு முக்கியக் கஷ்டம் என்னவென்றால் “ஹாம்லெட்” என்னும் நாடகத்தில், “ஹாம்லெட்”டின் பாகம்போல், இந்நாடகத் தில் முதற்காட்சி முதல் கடைசிக் காட்சி வரையில், இடையில் இளைப்பாறச் சாவகாசமின்றி, ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் வர வேண்டுமென்பதே.


இந்நாடகத்தில் முதன் முறை நடித்தபொழுது எனக்கு நேர்ந்த ஒரு சிறு கஷ்டத்தை எடுத்து எழுதுகிறேன். கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில், நான் அரங்கத்தின் பேரில் நடந்து செல்லும்பொழுது காலில் பாதரட்சை ஒன்றுமில்லாதபடியால், அங்கு அகஸ்மாத்தாய்க் கிடந்த ஒரு பழைய இரும்பாணி, எனது உள்ளங்காலில் நன்றாய்க் குத்தி ரத்தம் வடிய ஆரம்பித்தது. சீக்கிரம் காட்சியை முடித்துக்கொண்டு, கிரீன் ரூமுக்குப் போய் ரத்தம் வருவதை நிறுத்தி, காயத்தின் மீது கொஞ்சம் சுண்ணாம்பைப் பூசி பிறகு நன்றாய்க் கட்டிவிட்டேன். நாடகம் முடிந்தவுடன் வர்ணத்தைக் கூடக் கழுவுவதன்முன் எனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, நேராக வைத்தியர் வீட்டிற்குப் போய் அதற்குச் சிகிச்சை செய்து கொண்டேன். இதை இங்கு நான் எடுத்து எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. நாடக மேடையில் ஆடும் ஆக்டர்களுக்கு அங்கிருக்கும் பழைய இரும்பு ஆணி முதலிய சாமான்களால் காயம் நேரிடக்கூடும்; அவைகள் பழையனவாகித் துருப்பிடித்திருந்தால், ஏதோ சிறு காயந்தானே என்று அசட்டை செய்யலாகாது; உடனே சுண்ணாம்பையிட்டு, ரத்தம் வராதபடி கட்டிவிட்டு, கூடிய சீக்கிரத்தில் வைத்தியரிடம் போய் அதற்குச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு பழைய குண்டூசியாயினும் அது துருவேறியிருந்தால், ஒரு சமயம், செப்டிக் (sceptic) விஷத்தை யுண்டுபண்ணக்கூடும். ஆகவே, “கொட்டினால் தேள், கொட்டா விட்டால் பிள்ளைப் பூச்சி" என்கிற பழமொழிக்கிணங்க, எதற்கும் முன் ஜாக்கிரதையாயிருப்பது நலம்; இதை எனது நாடக மேடை நண்பர்களுக்கு அறிவிப்பது எனது கடன் என இங்கு இதைப்பற்றி எழுதலானேன்.
இந்நாடகத்தில் முதன் முறை நடித்தபொழுது எனக்கு நேர்ந்த ஒரு சிறு கஷ்டத்தை எடுத்து எழுதுகிறேன். கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில், நான் அரங்கத்தின் பேரில் நடந்து செல்லும்பொழுது காலில் பாதரட்சை ஒன்றுமில்லாதபடியால், அங்கு அகஸ்மாத்தாய்க் கிடந்த ஒரு பழைய இரும்பாணி, எனது உள்ளங்காலில் நன்றாய்க் குத்தி ரத்தம் வடிய ஆரம்பித்தது. சீக்கிரம் காட்சியை முடித்துக்கொண்டு, கிரீன் ரூமுக்குப் போய் ரத்தம் வருவதை நிறுத்தி, காயத்தின் மீது கொஞ்சம் சுண்ணாம்பைப் பூசி பிறகு நன்றாய்க் கட்டிவிட்டேன். நாடகம் முடிந்தவுடன் வர்ணத்தைக் கூடக் கழுவுவதன்முன் எனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, நேராக வைத்தியர் வீட்டிற்குப் போய் அதற்குச் சிகிச்சை செய்து கொண்டேன். இதை இங்கு நான் எடுத்து எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. நாடக மேடையில் ஆடும் ஆக்டர்களுக்கு அங்கிருக்கும் பழைய இரும்பு ஆணி முதலிய சாமான்களால் காயம் நேரிடக்கூடும்; அவைகள் பழையனவாகித் துருப்பிடித்திருந்தால், ஏதோ சிறு காயந்தானே என்று அசட்டை செய்யலாகாது; உடனே சுண்ணாம்பையிட்டு, ரத்தம் வராதபடி கட்டிவிட்டு, கூடிய சீக்கிரத்தில் வைத்தியரிடம் போய் அதற்குச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு பழைய குண்டூசியாயினும் அது துருவேறியிருந்தால், ஒரு சமயம், செப்டிக் (sceptic) விஷத்தை யுண்டுபண்ணக்கூடும். ஆகவே, “கொட்டினால் தேள், கொட்டா விட்டால் பிள்ளைப் பூச்சி” என்கிற பழமொழிக்கிணங்க, எதற்கும் முன் ஜாக்கிரதையாயிருப்பது நலம்; இதை எனது நாடக மேடை நண்பர்களுக்கு அறிவிப்பது எனது கடன் என இங்கு இதைப்பற்றி எழுதலானேன்.


இப் புத்தாவதாரமானது, உடனே இன்னும் இரண்டு முறை ஆடப்பட்டது. இவ்வாறு கூடிய சீக்கிரத்தில் மூன்று
இப் புத்தாவதாரமானது, உடனே இன்னும் இரண்டு முறை ஆடப்பட்டது. இவ்வாறு கூடிய சீக்கிரத்தில் மூன்று
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/656" இலிருந்து மீள்விக்கப்பட்டது