பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/657: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
முறை ஆடிய பொழுதும் நல்ல பணம் வசூலாயது. இந்நாடகத்திற்கென்று செலவு செய்த தொகை யெல்லாம் ஏறக்குறைய இந்த மூன்று முறை ஆடியதினாலேயே எடுத்துவிட்டோம். அன்றியும் இரண்டாம் முறை மூன்றாம் முறை ஆடியபொழுது முதன் முறை ஆடியதிலிருந்த குறைகளையெல்லாம் நீக்க சமயம் வாய்த்தது; அன்றியும் முதல் நாள் வருவதற்கு அசந்தர்ப்பமாயிருந்த நாடகாபி மானிகள், இரண்டாவது தினமாவது மூன்றாவது தினமாவது வந்து பார்ப்பதற்குச் சௌகரியமாயிருந்தது. இதன் பிறகுதான் எனது பால்ய நண்பர், சென்னை டிராமாடிக் சொசைடியாரைப் போல் நமது முக்கியமான நாடகங்களை யெல்லாம் மூன்று நான்கு தினங்களில் ஆடவேண்டும் என்று வற்புறுத்தியதன் நியாயத்தைக் கண்டேன்.

இந் நாடகமானது இதற்கப்புறம் எங்கள் சபையோரால் சில முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளும் இரண்டு மூன்று விசைதான் இதை ஆடியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், இதற்குத் தக்க திரைகள் உடுப்புகள் முதலியன சித்தம் செய்வது மேற்சொன்னபடி கடினமென்பது ஒன்றாயிருக்கலாம்; அன்றியும் தக்கபடி நடிப்பதற்கும் இது மிகவும் கஷ்டம் தரும் என்பதற்குச் சந்தேகமில்லை. இதர சபைகள் இந்நாடகத்தை நடித்ததில் நான் பார்த்த வரையில் “ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப்" (Trades Staff Club) இந் நாடகத்தை நடித்தது மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம். சில காட்சிகளின் ஒழுங்கில் அவர்கள் எங்கள் சபையைவிட மிகவும் புத்தி சாதுர்யமாகச் செய்தார்கள் என்று நான் கூற வேண்டும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. இதில் ஒரு சிறு வேடிக்கை என்னவென்றால் என் பெயர் கொண்ட ஒருவரே அங்கும் கௌதம புத்தராக நடித்தார்.
இந் நாடகமானது இதற்கப்புறம் எங்கள் சபையோரால் சில முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளும் இரண்டு மூன்று விசைதான் இதை ஆடியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், இதற்குத் தக்க திரைகள் உடுப்புகள் முதலியன சித்தம் செய்வது மேற்சொன்னபடி கடினமென்பது ஒன்றாயிருக்கலாம்; அன்றியும் தக்கபடி நடிப்பதற்கும் இது மிகவும் கஷ்டம் தரும் என்பதற்குச் சந்தேகமில்லை. இதர சபைகள் இந்நாடகத்தை நடித்ததில் நான் பார்த்த வரையில் “ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப்” (Trades Staff Club) இந் நாடகத்தை நடித்தது மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம். சில காட்சிகளின் ஒழுங்கில் அவர்கள் எங்கள் சபையைவிட மிகவும் புத்தி சாதுர்யமாகச் செய்தார்கள் என்று நான் கூற வேண்டும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. இதில் ஒரு சிறு வேடிக்கை என்னவென்றால் என் பெயர் கொண்ட ஒருவரே அங்கும் கௌதம புத்தராக நடித்தார்.

இந் நாடகக் கதையானது இரண்டு முறை சினிமாக் காட்சியில் சென்னையில் காட்டப்பட்டதைப் பார்த்தேன். ஆயினும் அவைகள் எனக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றவில்லை. அச் சினிமாக் காட்சியிலும் - எங்கள் சபையிலும் இக் கதையைப் பார்த்த அநேகர், எங்கள் சபை நடித்ததே அதிக விமரிசையாக இருந்ததெனக் கூறியதை - நான் கேட்டிருக்கிறேன்.
இந் நாடகக் கதையானது இரண்டு முறை சினிமாக் காட்சியில் சென்னையில் காட்டப்பட்டதைப் பார்த்தேன். ஆயினும் அவைகள் எனக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றவில்லை. அச் சினிமாக் காட்சியிலும் - எங்கள் சபையிலும் இக் கதையைப் பார்த்த அநேகர், எங்கள் சபை நடித்ததே அதிக விமரிசையாக இருந்ததெனக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/657" இலிருந்து மீள்விக்கப்பட்டது