பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/660: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
கஷ்டமானவை. அவ்விரண்டு வேடங்களில், முறையே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாரும், பி.வி. ராமாநுஜம் செட்டியாரும் மிகவும் விமரிசையாய் நடித்தார்கள் என்பது என் தீர்மானம். எங்கள் சபைக்குக் கீர்த்தி கொண்டு வந்த தெலுங்கு நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். இதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்று இது முதல் பன்முறை பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அதன் பொருட்டுக் காலஞ்சென்ற
கஷ்டமானவை. அவ்விரண்டு வேடங்களில், முறையே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாரும், பி.வி. ராமாநுஜம் செட்டியாரும் மிகவும் விமரிசையாய் நடித்தார்கள் என்பது என் தீர்மானம். எங்கள் சபைக்குக் கீர்த்தி கொண்டு வந்த தெலுங்கு நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். இதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்று இது முதல் பன்முறை பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அதன் பொருட்டுக் காலஞ்சென்ற வே. வெங்கட்ராயலு சாஸ்திரி யாருடைய உத்தரவையும் பெற்றிருக்கிறேன். ஆயினும் இதுவரையில், இதைப் பூர்த்தி செய்யாதிருக்கிறேன். இறைவன் அருள் இருக்குமாயின், என் பெற்றோர் பாத கமலம் போய்ச் சேருமுன் இதைப் பூர்த்தி செய்யும்படி ஈசன் திருவுள்ளமிருக்குமாறு பிரார்த்திக்கிறேன்.
வே. வெங்கட்ராயலு சாஸ்திரி யாருடைய உத்தரவையும் பெற்றிருக்கிறேன். ஆயினும் இதுவரையில், இதைப் பூர்த்தி செய்யாதிருக்கிறேன். இறைவன் அருள் இருக்குமாயின், என் பெற்றோர் பாத கமலம் போய்ச் சேருமுன் இதைப் பூர்த்தி செய்யும்படி ஈசன் திருவுள்ளமிருக்குமாறு பிரார்த்திக்கிறேன்.


சாதாரணமாகத் தெலுங்கு நாடகங்களில் நான் ஆடுவதில்லை. எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்காக, 'பிரமேளா' என்னும் நாடகத்திலும் 'ராமதாஸ்' நாடகத்திலும் நானவருடன் ஆடியதைப் பற்றி என் நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இவ்வருடம் இப் பிரதாப ருத்ரீயம் என்னும் தெலுங்கு நாடகத்தில், தெலுங்கு கண்டக்டரின் இச்சைப்படி, நான் இந்த நாடகத்தில் இரண்டு வேடம் தரித்தேன். ஒன்று; மகம்மதிய சிப்பாயாகவும் மற்றொன்று மகம்மதிய மந்திரியாகவும் சிப்பாயாக நடித்ததில் ஒன்று மாத்திரம் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. எனது பால்ய நண்பரில் ஒருவரான ராமதுரையும் நானும் பிரதாபருத்ர மஹாராஜாவை கைதியாகக் கொண்டு போகும் படகில் மகம்மதிய சிப்பாய்களாக, மேல் தட்டில் உட்கார்ந்து பீடி பிடித்ததுதான்! இந் நாடகம் நடிக்கும் பொழுதெல்லாம் வருஷா வருஷம் காஞ்சீபுரம் கருட சேர்வைக்குச் சிலர் பிரார்த்தனையாகப் போய் வருவது போல், நாங்களிருவரும் பீடி பிடித்து வருகிறோம்! இம்மாதிரியான சிறு வேஷங்கள் தரிப்பதில் எனக்குத் தற்காலம் மிகவும் சந்தோஷம்; பாடம் படிக்க வேண்டிய கஷ்டமில்லை; முகத்தில் வர்ணம் பூசிக் கொள்ள வேண்டிய கஷ்டமில்லை; வார்த்தைகளை மறப்பதற்கில்லை; சரியாக நடிக்கிறோமோ இல்லையோ என்னும் பீதியில்லை, கடைசியில் வேஷத்தைக் கலைப்பதிலும் கஷ்டமில்லை!
சாதாரணமாகத் தெலுங்கு நாடகங்களில் நான் ஆடுவதில்லை. எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்காக, ‘பிரமேளா’ என்னும் நாடகத்திலும் ‘ராமதாஸ்’ நாடகத்திலும் நானவருடன் ஆடியதைப் பற்றி என் நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இவ்வருடம் இப் பிரதாப ருத்ரீயம் என்னும் தெலுங்கு நாடகத்தில், தெலுங்கு கண்டக்டரின் இச்சைப்படி, நான் இந்த நாடகத்தில் இரண்டு வேடம் தரித்தேன். ஒன்று; மகம்மதிய சிப்பாயாகவும் மற்றொன்று மகம்மதிய மந்திரியாகவும் சிப்பாயாக நடித்ததில் ஒன்று மாத்திரம் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. எனது பால்ய நண்பரில் ஒருவரான ராமதுரையும் நானும் பிரதாபருத்ர மஹாராஜாவை கைதியாகக் கொண்டு போகும் படகில் மகம்மதிய சிப்பாய்களாக, மேல் தட்டில் உட்கார்ந்து பீடி பிடித்ததுதான்! இந் நாடகம் நடிக்கும் பொழுதெல்லாம் வருஷா வருஷம் காஞ்சீபுரம் கருட சேர்வைக்குச் சிலர் பிரார்த்தனையாகப் போய் வருவது போல், நாங்களிருவரும் பீடி பிடித்து வருகிறோம்! இம்மாதிரியான சிறு வேஷங்கள் தரிப்பதில் எனக்குத் தற்காலம் மிகவும் சந்தோஷம்; பாடம் படிக்க வேண்டிய கஷ்டமில்லை; முகத்தில் வர்ணம் பூசிக் கொள்ள வேண்டிய கஷ்டமில்லை; வார்த்தைகளை மறப்பதற்கில்லை; சரியாக நடிக்கிறோமோ இல்லையோ என்னும் பீதியில்லை, கடைசியில் வேஷத்தைக் கலைப்பதிலும் கஷ்டமில்லை!
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/660" இலிருந்து மீள்விக்கப்பட்டது