பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/665: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
முக்கியக் காரணமுண்டு. இங்கிலீஷ் வைத்தியர்கள் யாராவது என்னை வந்து பார்த்திருப்பார்களாயின், கட்டாயமாகக் கொயினா மருந்து கொடுத்திருப்பார்களென்பது நிச்சயம். அந்தக் கொயினா ஜ்வரத்தைக் கண்டித்த போதிலும், எனக்கு மிகுந்த பலஹீனத்தை யுண்டுபண்ணியிருக்கும்; நான் அன்றிரவு நாடக மேடையில் நடித்திருக்க முடியா தென்று உறுதியாய் நம்புகிறேன். அவ்வாறு பலஹீனத்தை உண்டுபண்ணாது, ஜ்வரத்தைத் தணித்தது மன்றி எனக்கு ஊக்கத்தையும் கொடுத்தது போன்ற அநேகம் மருந்துகள், நம்து பூர்வீக வைத்திய சாஸ்திரங்களில் இருக்கின்றன. ஆயினும் அவற்றைச் சரியாகப் படிப்பாரும், சரியாக ஆதரிப்பாரும், அப்படிப்பட்ட மருந்துகளைச் சரியான முறைப்படி செய்வாருமின்றி, நமது ஆயுர்வேதம் க்ஷணதசையை அடைந்திருக்கின்றது என்பது என் தீர்மானமான எண்ணம். இதை எனது இந்திய நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை என எண்ணி எழுதலானேன். அந்த ஒளஷதத்தைக் கொடுத்து, என்னை அன்று நாடக மேடையின் பேரில் ஏறச் செய்த “மணி" வைத்தியருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் என்னிடம் இந்த சிகிச்சைக்காகப் பணம் வாங்க மாட்டேன் என்று மறுத்தபடியால், அவருக்கு நான் பதிப்பித்துள்ள அவர் விரும்பிய சில நாடகங்களை காணிக்கையாக என் வந்தனத்துடன் பிறகு அனுப்பினேன். இங்கு நான் எழுதியதை ஒருக்கால் அவர் பார்க்கும்படி நேரிடின், அவர் அன்று எனக்குச் செய்த பேருபகாரத்தை இன்றளவும் நான் மறக்கவில்லை என்று சிறிது மகிழ்வாராக!
முக்கியக் காரணமுண்டு. இங்கிலீஷ் வைத்தியர்கள் யாராவது என்னை வந்து பார்த்திருப்பார்களாயின், கட்டாயமாகக் கொயினா மருந்து கொடுத்திருப்பார்களென்பது நிச்சயம். அந்தக் கொயினா ஜ்வரத்தைக் கண்டித்த போதிலும், எனக்கு மிகுந்த பலஹீனத்தை யுண்டுபண்ணியிருக்கும்; நான் அன்றிரவு நாடக மேடையில் நடித்திருக்க முடியா தென்று உறுதியாய் நம்புகிறேன். அவ்வாறு பலஹீனத்தை உண்டுபண்ணாது, ஜ்வரத்தைத் தணித்தது மன்றி எனக்கு ஊக்கத்தையும் கொடுத்தது போன்ற அநேகம் மருந்துகள், நம்து பூர்வீக வைத்திய சாஸ்திரங்களில் இருக்கின்றன. ஆயினும் அவற்றைச் சரியாகப் படிப்பாரும், சரியாக ஆதரிப்பாரும், அப்படிப்பட்ட மருந்துகளைச் சரியான முறைப்படி செய்வாருமின்றி, நமது ஆயுர்வேதம் க்ஷணதசையை அடைந்திருக்கின்றது என்பது என் தீர்மானமான எண்ணம். இதை எனது இந்திய நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை என எண்ணி எழுதலானேன். அந்த ஒளஷதத்தைக் கொடுத்து, என்னை அன்று நாடக மேடையின் பேரில் ஏறச் செய்த “மணி” வைத்தியருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் என்னிடம் இந்த சிகிச்சைக்காகப் பணம் வாங்க மாட்டேன் என்று மறுத்தபடியால், அவருக்கு நான் பதிப்பித்துள்ள அவர் விரும்பிய சில நாடகங்களை காணிக்கையாக என் வந்தனத்துடன் பிறகு அனுப்பினேன். இங்கு நான் எழுதியதை ஒருக்கால் அவர் பார்க்கும்படி நேரிடின், அவர் அன்று எனக்குச் செய்த பேருபகாரத்தை இன்றளவும் நான் மறக்கவில்லை என்று சிறிது மகிழ்வாராக!


அன்றிரவு வைத்தியர் கட்டளைப்படி வெறும் மிளகு ரசம் சாதம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, வேடம் பூண்டு மேடை ஏறினேன். “மனோஹரன்" நாடகமாடுவது கடினம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நன்றாயறிவார்கள் என்று நினைக்கிறேன். எனது இடது கால் சற்று வீங்கி, என் மேஜோடைப் போடுவதற்குக் கஷ்டமாயிருந்தது; ஜ்வரம் விட்டபோதிலும் பலஹீனம் அதிகமாயிருந்தது. மனத்தில் உற்சாகமிகுந்த போதிலும், தேகத்தில் வலுவில்லை. அப்படியிருந்தும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், ஒருவிதமாக அந் நாடகத்தை ஆடி முடித்தேன்.
அன்றிரவு வைத்தியர் கட்டளைப்படி வெறும் மிளகு ரசம் சாதம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, வேடம் பூண்டு மேடை ஏறினேன். “மனோஹரன்” நாடகமாடுவது கடினம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நன்றாயறிவார்கள் என்று நினைக்கிறேன். எனது இடது கால் சற்று வீங்கி, என் மேஜோடைப் போடுவதற்குக் கஷ்டமாயிருந்தது; ஜ்வரம் விட்டபோதிலும் பலஹீனம் அதிகமாயிருந்தது. மனத்தில் உற்சாகமிகுந்த போதிலும், தேகத்தில் வலுவில்லை. அப்படியிருந்தும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், ஒருவிதமாக அந் நாடகத்தை ஆடி முடித்தேன்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/665" இலிருந்து மீள்விக்கப்பட்டது