பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/670: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பிரயத்தனப்பட்டார். ஏதோ காரணத்தினால் பலிக்காமற் போயிற்று. அவர் காலமான பிறகு பல கண்டக்டர்கள்; இதை ஆட முடியாது என்று கைவிட்ட இந்நாடகத்தை, இவ் வருஷத்திய தமிழ் கண்டக -ராகிய எஸ். சத்யமூர்த்தி ஐயர் எடுத்துக்கொண்டு, நடத்தி வைத்தார். என்னுடைய அபிப்பிராயத்தில் நாடகம் என்னவோ நல்ல நாடகம்தான்; ஆயினும் மிகவும் பெரிதானது. எங்கள் சபை நடித்தபோது இதில் பாதியை நீக்கி ஆடினார்கள். நாராயண சாஸ்திரி யாரின் குமாரர்களுள் ஒருவரான டி.வி. சுப்பிரமணிய ஐயர் என்பவர் கதாநாயகனாக நடித்தார். அவரது மற்றொரு குமாரன் காளிதாசன் வேடம் பூண்டு மிகவும் அழகாய்ப் பாடினார்.
பிரயத்தனப்பட்டார். ஏதோ காரணத்தினால் பலிக்காமற் போயிற்று. அவர் காலமான பிறகு பல கண்டக்டர்கள்; இதை ஆட முடியாது என்று கைவிட்ட இந்நாடகத்தை, இவ் வருஷத்திய தமிழ் கண்டக -ராகிய எஸ். சத்யமூர்த்தி ஐயர் எடுத்துக்கொண்டு, நடத்தி வைத்தார். என்னுடைய அபிப்பிராயத்தில் நாடகம் என்னவோ நல்ல நாடகம்தான்; ஆயினும் மிகவும் பெரிதானது. எங்கள் சபை நடித்தபோது இதில் பாதியை நீக்கி ஆடினார்கள். நாராயண சாஸ்திரி யாரின் குமாரர்களுள் ஒருவரான டி.வி. சுப்பிரமணிய ஐயர் என்பவர் கதாநாயகனாக நடித்தார். அவரது மற்றொரு குமாரன் காளிதாசன் வேடம் பூண்டு மிகவும் அழகாய்ப் பாடினார்.


இதன் பிறகு எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நாடகங்களிலொன்றாகிய “இரண்டு நண்பர்கள்" என்பதை எடுத்துக் கொண்டார். இந் நாடகமானது இதற்கு முன்பாகச் சுமார் இருபது வருடங்களாக ஆடாமலிருக்கிறது. நாடகத்தைப் பற்றி எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இக் கதாநாயகியாகிய "மனோரமா" வேடம் பூண்ட போதெல்லாம் இது “காமெடி" - அதாவது சந்தோஷகரமாய் முடியும் நாடகமாக ஆடப்பட்டது. அதை நான் அச்சிட்ட பொழுது “டிராஜெடி" - அதாவது துக்ககரமாய் முடியும் நாடகமாக எழுதினேன். அதன்பேரில் ரங்கவடிவேலு அதில் தனக்கு ஆட இஷ்டமில்லையென்று அதை வெறுத்தார்; இதுதான் பிறகு சுமார் இருபது வருடங்கள் வரை இது ஆடப்படாமலிருந்ததற்குக் காரணம். “இது நல்ல நாடகமாயிருக்கிறதே. இவ்வருஷம் இதை நான் எடுத்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?" என்று சத்தியமூர்த்தி ஐயர் என்னைக் கேட்டபோது, எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை நான் கேட்க, அவர் இந் நாடகத்தை அச்சிட்டபடியே சோககரமான முடிவுடன் ஆடத் தனக்குச் சம்மதம் என்று கூற, அப்படியே ஆட நானும் இசைந்தேன். இவ்வருஷம் டிசம்பர் மாசம் இதை நாங்கள் மறுபடியும் ஆடினோம். நாகரத்தினம் ஐயர் மனோரமாவாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவர் தற்காலம் நடித்து வரும் முக்கிய நாடகப் பாத்திரங்களில் இந்த “மனோரமா" ஒன்றாகும்.
இதன் பிறகு எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நாடகங்களிலொன்றாகிய “இரண்டு நண்பர்கள்” என்பதை எடுத்துக் கொண்டார். இந் நாடகமானது இதற்கு முன்பாகச் சுமார் இருபது வருடங்களாக ஆடாமலிருக்கிறது. நாடகத்தைப் பற்றி எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இக் கதாநாயகியாகிய “மனோரமா” வேடம் பூண்ட போதெல்லாம் இது “காமெடி” - அதாவது சந்தோஷகரமாய் முடியும் நாடகமாக ஆடப்பட்டது. அதை நான் அச்சிட்ட பொழுது “டிராஜெடி” - அதாவது துக்ககரமாய் முடியும் நாடகமாக எழுதினேன். அதன்பேரில் ரங்கவடிவேலு அதில் தனக்கு ஆட இஷ்டமில்லையென்று அதை வெறுத்தார்; இதுதான் பிறகு சுமார் இருபது வருடங்கள் வரை இது ஆடப்படாமலிருந்ததற்குக் காரணம். “இது நல்ல நாடகமாயிருக்கிறதே. இவ்வருஷம் இதை நான் எடுத்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று சத்தியமூர்த்தி ஐயர் என்னைக் கேட்டபோது, எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை நான் கேட்க, அவர் இந் நாடகத்தை அச்சிட்டபடியே சோககரமான முடிவுடன் ஆடத் தனக்குச் சம்மதம் என்று கூற, அப்படியே ஆட நானும் இசைந்தேன். இவ்வருஷம் டிசம்பர் மாசம் இதை நாங்கள் மறுபடியும் ஆடினோம். நாகரத்தினம் ஐயர் மனோரமாவாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவர் தற்காலம் நடித்து வரும் முக்கிய நாடகப் பாத்திரங்களில் இந்த “மனோரமா” ஒன்றாகும்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/670" இலிருந்து மீள்விக்கப்பட்டது