திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தகுதியுடையதனைத் தகுதி என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆறன் உருபு தோறும் என்பதன் பொருட்டாய் நின்றது. பெறின் என்பது, அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது.
:இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
===திருக்குறள் 112 (செப்பமுடையவன்)===
 
;செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
;யெச்சத்திற் கேமாப் புடைத்து.
 
::செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
::எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (02)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): செப்பம் உடையவன் ஆக்கம்= நடுவுநிலைமையை உடையவனது செல்வம்;
:சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து= பிறர் செல்வம்போல் அழிவின்றி அவன் வழியின் உள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
:விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்குந்துணையும் அவன் தனக்கும் ஏமாப்புடைத்து என்பது பெற்றாம். அறத்தொடு வருதலின் அன்னதாயிற்று. தான் இறந்து எஞ்சி நிற்பது ஆகலின், 'எச்சம்' என்றார்.
 
===திருக்குறள் 113 (நன்றேதரினும்)===
 
;நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
;யன்றே யொழிய விடல்.
 
::நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
::அன்றே ஒழிய விடல். (03)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நன்றே தரினும்= தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும்;
:நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்= நடுவுநிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே யொழிய விடுக.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: நன்மை பயவாமையின், 'நன்றே தரினும்' என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது.
:இவையிரண்டு பாட்டானும் முறையே நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மைபயத்தலும், ஏனைச்செல்வம் தீமைபயத்தலுங் கூறப்பட்டன.
 
===திருக்குறள் 114 (தக்கார்)===
 
;தக்கார் தகவில ரென்ப தவரவ
;ரெச்சத்தாற் காணப் படும்.
::தக்கார் தகவு இலர் என்பது அவர்அவர்
::எச்சத்தால் காணப்படும் (04)