திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 67:
:தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாகலின், இருதிறததாரையும் அறிதற்கு அவை குறியாயின.
:இதனால், தககாரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.
 
 
===திருக்குறள் 115 (கேடும் பெருக்கமும்)===
 
;கேடும் பெருக்கமுமில்லல்ல நெஞ்சத்துக்
;கோடாமை சான்றோர்க் கணி.
::கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
::கோடாமை சான்றோர்க்கு அணி (05)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): கேடும் பெருக்கமும் இல் அல்ல= தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கு முன்னே அமைந்து கிடந்தன;
:நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி= அவ்வாற்றை அறிந்து அவை காரணமாக மனததின்கட் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
;பரிமேலழகர் உரைவிளக்கம்:
:அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடுவாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக்குறித்தும் ஒருதலைக்கண்நிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதலன்று என உண்மையுணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை யழகு செய்தலின், சான்றோர்க்கணி யென்றார்.
 
===திருக்குறள் 116 ===
 
;கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
;நடுவொரீஇ யல்ல செயின்.
 
::கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
::நடுவு ஒரீஇ அல்ல செயின் (06)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின்= ஒருவன் தன்னெஞ்சம் நடுவுநிற்றலை யொழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்;
:யான் கெடுவல் என்பது அறிக= அந்நினைவை யான் கெடக்கடவேன் என்று உணரும் உற்பாதமாக அறிக.
 
;பரிமேலழகர் உரை விளககம்: நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், செயின் என்றார்.
 
===திருக்குறள் 117 (கெடுவாக)===
 
;கெடுவாக வையா துலக நடுவாக
;நன்றிக்கட் டங்கியான் றாழ்வு
::கெடுவாக வையாது உலகம் நடுவாக
::நன்றிக்கண் தங்கியான் தாழ்வு(07)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு= நடுவாக நின்று அறததின்கண்ணே தங்கினவனது வறுமையை;
:கெடுவாக வையாது உலகு= வறுமையென்று கருதார் உயர்ந்தோர்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: கெடுவென்பது முதனிலைத்தொழிற்பெயர். செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம்.
:இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா வென்பதூஉம், கொடுதல் கேட்டிற்கு ஏதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடுஅன்று என்பதூஉம் கூறப்பட்டன.
 
===திருக்குறள் 118 (சமன்செய்து)===
 
;சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
;கோடாமை சான்றோர்க் கணி.
 
::சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
::கோடாமை சான்றோர்க்கு அணி (08)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்= முன்னே தான்சமனாகநின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்குந் துலாம்போல
:அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி= இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகாம்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடையாகிய அமைதலும் ஒருபாற் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தொடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபாற் கோடாமையாவது, அவ்வுள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.
 
===திருக்குறள் 119 (சொற்கோட்ட)===
 
;சொற்கோட்ட மில்லது செப்பமொருதலையா
;வுட்கோட்ட மின்மை பெறின்.
 
::சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
::உள் கோட்டம் இன்மை பெறின் (09)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): செப்பம் சொல் கோட்டம் இல்லது= நடுவுநிலைமையாவது, சொல்லின்கட் கோடுதல் இல்லாததாம்;
:உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின்= அஃது அன்னதாவது, மனத்தின்கட் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'சொல்' ஊழான் அறுத்துச் சொல்லும் சொல். காரணம்பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம் எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவுநிலைமை அன்று என்பது பெறப்பட்டது.