திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 87:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறுபோல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்கவேண்டும் என்பார் 'ஆமைபோல்` என்றார். ஒருமைக்கட் செய்த வினையின்பயன் எழுமையுந் தொடருமென்பது இதனான் அறிக.
;:இதனான் '''மெய்யடக்கம்''' கூறப்பட்டது.
 
==திருக்குறள் 127 (யாகாவாராயினு)==
 
;யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
;சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
 
::யாகாவா ராயினும் நா காகக காவாக்கால்
::சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): யாகாவாராயினும் நா காகக= தம்மாற் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்கமாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க;
:காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்= அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கட் பட்டுத் தாமே துன்புறுவர்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: யாவென்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணரநின்றது. முற்றும்மை விகாரத்தாற் றொக்கது. சொற்குற்றம் சொல்லின்கட் டோன்றும் குற்றம். அல்லாப்பர், செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பர் என்பது ஒருசொல்.
 
 
==திருக்குறள் 128 (ஒன்றானுந்)==
 
;ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
;னன்றாகா தாகி விடும்
 
::ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
::நன்று ஆகாதாகி விடும்.
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒன்றானும் தீ சொல் பொருட்பயன் உண்டாயின்= தீயவாகிய சொற்களின் பொருள்களாற் பிறர்க்குவருந் துன்பம் ஒன்றாயினும் ஒருவன்பக்கல் உண்டாவதாயின்;
:நன்று ஆகாதாகி விடும்= அவனுக்குப் பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய் விடும்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தீய சொல்லாவன, தீங்குபயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லதாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின் என்று உரைப்பாரும் உளர்.''(இவ்வறு கூறுபவர் மணக்குடவர்)''
 
 
==திருக்குறள் 129 (தீயினாற்)==
 
;தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
;நாவினாற் சுட்ட வடு
 
::தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
::நாவினால் சுட்ட வடு
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
:நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
;பரிமேலழகர் உரை விளக்கம்: ஆறிப்போதலால், தீயினாற் சுட்டதனைப் புண் என்றும், ஆறாது கிடத்தலால் நாவினாற் சுட்டதனை வடு என்றும் கூறினார். தீயும், வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்குமாயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது 'குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம்'.
:இவை மூன்று பாட்டானும் '''மொழியடக்கம்''' கூறப்பட்டது.