17,187
தொகுப்புகள்
("==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை=="-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை==
=பரிமேலழகர் உரை=
;அதிகார முன்னுரை: அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், '''அடக்கமுடைமை'''யின் பின் வைக்கப்பட்டது.
==திருக்குறள் 131 (ஒழுக்கம்)==
;ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
;முயிரினு மோம்பப் படும்
::ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
::உயிரினும் ஓம்பப் படும் (01)
;பரிமேலழகர் உரை(இதன்பொருள்): ஒழுக்கம் விழுப்பம் தரலான்= ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்;
:ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்= அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.
==திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)==
;பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
;தேரினு மஃதே துணை
::பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
::தேரினும் அஃதே துணை
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;
|
தொகுப்புகள்