திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
==திருக்குறள் 136 (ஒழுக்கத்தினொல்கார்)==
 
;ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
;னேதம் படுபாக் கறிந்து
 
::ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
::ஏதம் படுபாக்கு அறிந்து (06)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்= செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்திற் சுருங்கார் மனவலியுடையார்;
:இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து= அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலமாகிய குற்றம் உண்டாமாற்றை அறிந்து.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: ஒழுக்கத்திற் சுருக்கம் அதனை உடையார்மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.
 
==திருக்குறள் 137 (ஒழுக்கத்தினெய்துவர்)==
 
;ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
;னெய்துவ ரெய்தாப் பழி
 
::ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
::எய்துவர் எய்தாப் பழி (07)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்= எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;
:இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர்= அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: பகைபற்றி அடாப்பழி கூறியவழி அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி' எய்துவர் என்றார்.
:இவை ஐந்துபாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படுங்குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.
 
==திருக்குறள் 138 (நன்றிக்கு)==
 
;நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
;மென்று மிடும்பை தரும் (08)
 
::நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
::என்றும் இடும்பை தரும்
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நல்லொழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்= ஒருவனுக்கு நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;
:தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்= தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால், தீயவொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல்லொழுக்கம் இன்பந் தருதலும் பெற்றாம். ஒன்றுநின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின், இதனாற் பின்விளைவு கூறப்பட்டது.
17,187

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/11683" இருந்து மீள்விக்கப்பட்டது