திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 123:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தீயசொற்களாவன: பிறர்க்குத் தீங்குபயக்கும் பொய்ம் முதலியனவும், வருணத்திற்கு உரியஅல்லனவும் ஆம். அவற்றது பன்மையாற் சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொலல்' சாதியொருமை. சொல்லெனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். நல்லசொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.
 
 
==திருக்குறள் 140 (உலகத்தோடு)==
 
;உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
;கல்லா ரறிவிலா தார்
 
:உலகத்தொடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
:கல்லார் அறிவிலாதார் (10)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்= உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்;
:பல கற்றும் அறிவிலாதார்= பல நூல்களையுங் கற்றாராயினும் அறிவிலாதார்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'உலகத்தோடு பொருந்த ஒழுகுத'லாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான், அவையும் அடங்க 'உலகத்தோ டொட்ட' வென்று்ம், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல்.
:இவை இரண்டு பாட்டானும், '''சொல்லானும், செயலானும்''' வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றாற் றொகுத்துக் கூறப்பட்டன.