திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 143:
 
==திருக்குறள் 219 (நயனுடையான்)==
 
 
;நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
;செய்யா தமைகலா வாறு
 
 
:நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
:செய்யாது அமைகலா ஆறு
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல்= ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது;
:செயும் நீர செய்யாது அமைகலா ஆறு= தவிராது செய்யும் நீர்மையை உடைய அவ் ஒப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம், என்றவாறு.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தான் நுகர்வன நுகரப்பெறாமை அன்று என்பதாம்.
 
 
:இவை இரண்டுபாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 220 (ஒப்புரவினால்)==
 
 
;ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
;விற்றுக்கோட் டக்க துடைத்து
 
 
::ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
::விற்றுக்கோள் தக்கது உடைத்து
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒப்புரவினால் வரும் கேடு எனின்= ஒப்புரவு செய்தலான், ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின்;
:அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து= அக்கேடுதன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து, என்றவாறு.
 
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: தன்னை விற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லையன்றே; இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி.
 
:இதனால் ஒப்புரவினால் கெடுவது கேடுஅன்று என்பது கூறப்பட்டது.
 
 
==திருவள்ளுவர் இயற்றிய முப்பால் நூலின் '''ஒப்புரவறிதல்''' அதிகாரத்திற்குப் பரிமேலழகர் வரைந்த உரை முற்றுப்பெற்றது==