திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
 
;உரைவிளக்கம்: எள்ளாது என்னும் எதிர்மறைவினையெச்சம் 'எள்ளாமை' எனத் திரிந்து நின்றது. 'வீட்டினை யிகழ்த'லாவது, காட்சியே அளவையாவது என்றும், நிலம் நீர் தீ வளி யெனப் பூதம் நான்கேயென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்புப்போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும் பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயத முதலிய மயக்கநூல்களைத் தெளிந்து, அவற்றிற்கேற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்நநூற் பொருளையேனும் ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின், அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்தொன்றும்' என்றார். நெஞ்சு கள்ளாமற்காக்க எனவே, துறந்தார்க்கு விலககப்பட்ட கள்ளுதல், கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.
 
 
 
 
==குறள்: 282 (உள்ளத்தால்)==
 
 
;உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
;கள்ளத்தாற் கள்வே மெனல் (02)
 
 
 
:உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
:கள்ளத்தால் கள்வேம் எனல்.
 
 
;பரிமேலழகர் உரை: உள்ளத்தால் உள்ளலும் தீதே= குற்றங்களைத் தந் நெஞ்சாற் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்= ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியாவகையால் வஞ்சித்துக் கொள்வேம் என்று கருதற்க.
 
 
:உரைவிளக்கம்: 'உள்ளத்தால்' எனவேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையார் உள்ளம்போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவுசிறப்பும்மை. அல்விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது.
:இவை இரண்டுபாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃதுஎன்பதூஉம் இது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.