திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
:உரைவிளக்கம்: 'உள்ளத்தால்' எனவேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையார் உள்ளம்போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவுசிறப்பும்மை. அல்விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது.
:இவை இரண்டுபாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃதுஎன்பதூஉம் இது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.
 
 
 
==குறள்: 283 (களவினால்)==
 
 
 
;களவினா லாகிய வாக்க மளவிறந்
;தாவது போலக் கெடும் (03)
 
 
 
:களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
:ஆவது போலக் கெடு்ம்.
 
 
 
;பரிமேலழகர் உரை: களவினால் ஆகிய ஆக்கம்= களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவு இறந்து கெடும்= வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
 
 
 
;உரைவிளககம்: ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. 'எல்லையைக் கடந்து கெடுத'லாவது, தான் போங்காற் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன் கொண்டுபோதல். அளவறிந்து என்று பாடம்ஓதி, அவர் பயன் கொள்ளும் அளவறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும் என்று உரைப்பாரும் உளர்.
 
 
 
==குறள்: 284 (களவின்கட்)==
 
 
;களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
;வீயா விழுமந் தரும் (04)
 
 
 
:களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
:வீயா விழுமம் தரும்.
 
 
 
;இதன்பொருள்: களவின்கண் கன்றிய காதல்= பிறர்பொருளை வஞசித்துக் கோடற்கண்ணே மிக்கவேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும்= அப்பொழுது இனிதுபோலத்தோன்றித் தான் பயன் கொடுக்கும்பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
 
 
 
 
==குறள்: 285 (அருள்கருதி)==
 
 
 
;அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
;பொச்சாப்புப் பார்ப்பார்க ணில் (05)
 
 
:அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப்
:பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல்.
 
 
 
;இதன் பொருள்: அருள் கருதி அன்பு உடையர் ஆதல்= அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல்= பிறர் பொருளை வஞ்சி்த்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார் மாட்டு உண்டாகாது.
 
 
;உரைவிளக்கம்: தமக்குரிய பொருளையும், அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்குரிய பொருளை நன்கு மதித்து அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கண்மேல் அருள்செய்தல் நமக்கு உறுதி என்றுஅறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம்.