திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 48:
 
 
:;உரைவிளக்கம்: 'உள்ளத்தால்' எனவேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையார் உள்ளம்போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவுசிறப்பும்மை. அல்விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது.
:இவை இரண்டுபாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃதுஎன்பதூஉம் இது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.
 
வரிசை 89:
 
;இதன்பொருள்: களவின்கண் கன்றிய காதல்= பிறர்பொருளை வஞசித்துக் கோடற்கண்ணே மிக்கவேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும்= அப்பொழுது இனிதுபோலத்தோன்றித் தான் பயன் கொடுக்கும்பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
 
 
 
;உரைவிளக்கம்: கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், வீயா விழுமந் தரும் என்றார்.
இவை இரண்டுபாட்டானும் அவை கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.
 
 
வரி 110 ⟶ 115:
 
;உரைவிளக்கம்: தமக்குரிய பொருளையும், அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்குரிய பொருளை நன்கு மதித்து அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கண்மேல் அருள்செய்தல் நமக்கு உறுதி என்றுஅறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம்.
 
 
 
==குறள்: 286 (அளவின்கண்)==
 
 
 
;அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
;கன்றிய காத லவர் (06)
 
 
 
:அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்கண்
:கன்றிய காதலவர்.
 
 
;இதன்பொருள்: அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்- உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழு்கமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர்= களவின்கண்ணே மிக் வேட்கையை உடையார்.
 
 
 
;உரைவிளக்கம்: 'உயிர் முதலியவற்றை அளத்த'லாவது, காட்சி முதலாகச்சொல்லப்பட்ட அளவைகளான் உயி்ர்ப்பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக் குற்ற விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுட் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோக ஞானங்களையும் அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. 'அதற்கேற்ப ஒழுகுத'லாவது அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.