திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 162:
 
 
;அளவறிந்தார் நெஞ்சத்தறம்போலநெஞ்சத் தறம்போல நிற்குங்
;களவறிந்தார் நெஞ்சிற் கரவு (08)
 
வரிசை 174:
 
 
;உரைவிளக்கம்: உயிர் முதலியவற்றை அறந்தறிந்தார்க்குஅறந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையாற் பெற்றாம்.
:களவோடு மாறின்றி நிற்பது இதனாற் கூறப்பட்டது.
 
 
 
==குறள்: 289 (அளவல்ல)==
 
 
 
;அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
;மற்றைய தேற்றா தவர் (09)
 
 
:அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
:மற்றைய தேற்றாதவர்.
 
 
;இதன்பொருள்: அளவு அல்ல செய்தாங்கே வீவர்= அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்தபொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர்= களவல்லாத பிறவற்றை அறியாதவர்.
 
 
;உரைவிளக்கம்: தீய நினைவுகளாவன, பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ் வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்டவதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலுஞ் செய்தலோடு ஒக்கும் ஆகலிற் 'செய்'தென்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கிக் கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்குமாகலின் 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். 'மற்றைய'வாவன, துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய் கனி கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை, அவற்றையே நுகர்ந்து அவ்வளவான் நிறைந்திருத்தலை அறியாமை.
:இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.
 
 
 
==குறள்: 290 (கள்வார்க்குத்)==
 
 
;கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
;தள்ளாது புத்தே ளுலகு (10)
 
 
:கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
:தள்ளாது புத்தேள் உலகு.
 
 
;இதன்பொருள்: கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்= களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்புந் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது= அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணதாகிய புத்தேள் உலகும் தவறாது.
 
 
;உரைவிளக்கம்: உயிர் நிற்றற்கு இடனாகலின், 'உயிர்நிலை' எனப்பட்டது. சிறப்பும்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின் 'உயிர்நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். "மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து"<ref>திருக்குறள்-596</ref> என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக.இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்.
:இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.