திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 143:
 
 
;உரைவிளக்கம்: வைசேடிகர்<sup>4</sup> பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப் பொருள் என்றாற் போல ஈண்டுக் 'குணம்' 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது.
:இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
:<sup>4.விசேஷம் என்னும் பதார்த்தத்தை (கணாதரது நியாயமதத்தை)அங்கீகரித்தவர் வைசேடிகர்,</sup>.
 
 
==குறள்: 308 (இணரெரி)==
 
 
;இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
;புணரின் வெகுளாமை நன்று (08)
 
 
:இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
:புணரின் வெகுளாமை நன்று.
 
 
;இதன்பொருள்: இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்= பலசுடரை உடைத்தாய பேரெரிவந்து தோய்ந்தால் ஒத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தான் ஆயினும்; வெகுளாமை புணரின் நன்று= அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.
 
;உரைவிளக்கம்: இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர்எரி' என்றும், அதனை மேன் மேலும் செய்தல் தோன்ற 'இன்னா'வென்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார்.
:இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.
 
 
==குறள்: 309 (உள்ளியதெல்லா)==
 
 
;உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
;ளுள்ளான் வெகுளி யெனின் (09)
 
 
:உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
:உள்ளான் வெகுளி எனின்.
 
 
;இதன்பொருள்: உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்= தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையான் ஆயின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும்= தான் கருதிய பேறுஎல்லாம் ஒருங்கே பெறும்.
 
 
;உரைவிளக்கம்: 'உள்ளத்தால்' என வேண்டாது கூறியவதனான், அருளுடை உள்ளம்என்பது முடிந்தது. அதனன் உள்ளாமையாவது, அவ்வருளாகிய பகையை வளர்த்து அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவையெல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளியதெல்லாம் உடன் எய்தும்' என்றார்.
:இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.