பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/94: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
ஒருசேர தொகுக்கப்பெற்று, ஒருநிலையாக்கப் பெற்று: (Standardised), மேலும் சில புதிய சொற்கள் சேர்க்கப் பெற்றுச் சென்னை மாநில அரசின் ஆதரவில் (1947) மீண்டும் நூல் வடிவாக வெளியாயின. இவை ஒரு பத்தாண்டுகள் நூல்கள் எழுதுவோருக்குத் துணை நின்றன. இந் நிலையில் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அமைதல் வேண்டும் என்ற கருத்து அறிஞர்களிடையே முகிழ்த்தது. இதற்கு இதுகாறும் வெளிவந்த சொற்கள் போதா என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.
ஒருசேர தொகுக்கப்பெற்று, ஒருநிலையாக்கப் பெற்று: (Standardised), மேலும் சில புதிய சொற்கள் சேர்க்கப் பெற்றுச் சென்னை மாநில அரசின் ஆதரவில் (1947) மீண்டும் நூல் வடிவாக வெளியாயின. இவை ஒரு பத்தாண்டுகள் நூல்கள் எழுதுவோருக்குத் துணை நின்றன. இந் நிலையில் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அமைதல் வேண்டும் என்ற கருத்து அறிஞர்களிடையே முகிழ்த்தது. இதற்கு இதுகாறும் வெளிவந்த சொற்கள் போதா என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.


இந் நிலையில் இளங்கலை மட்டத்தில் சில அறிவியல் துறைகளைத் துணைப் பாடங்களாக (Minors) அமைக்கலாம் என்ற கொள்கையைச் சென்னைப் பல்கலைக் கழகம் ஒப்புக் கொண்டது. இதற்கு உடனடியாகத் தமிழில் பல நூல்கள் எழுதப்பெற வேண்டிய இன்றியமையாமையும் எழுந்தது. திரு. சி. சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் திரு.ஜி.ஆர். தாமோதரன் அவர்களைத் தலைவராகக் கொண்டு அரசினரால் ‘கல்லூரித் தமிழ்க் குழு’ (College Tamil Committee) என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பெற்றது. அது பல்வேறு துறைகட்கென அமைக்கப் பெற்ற, உட்குழுக்களின் துணையால் பல்வேறு துறைக் கலைச் சொற்களை உருவாக்கியது. இவை யாவும் நூல் வடிவில் சென்னை மாநில அரசினரால் (1960இல்) வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றிலும் குறைகள் இல்லாமல் இல்லை. என்றாலும், நூல்கள் எழுதுவோருக்கு இவை துணையாக நிற்கும் என்பதற்கு ஐயம் இல்லை. நூல் எழுதுவோர், மாணாக்கர்கட்குக் கற்பிப்போர் இவர்களிடம் இச் சொற்கள் நன்கு செப்பமுற்று வருகின்றன. இங்ஙனம் அந்தந்த நேரங்களில் சில அவசர நிலைகளுக் கேற்ப வெளியிடப்பெறும் கலைச் சொல் அகராதிகளில் பல குறைகள் உள்ளன. இம்முயற்சிகள் விட்டுவிட்டு நடை
இந் நிலையில் இளங்கலை மட்டத்தில் சில அறிவியல் துறைகளைத் துணைப் பாடங்களாக (Minors) அமைக்கலாம் என்ற கொள்கையைச் சென்னைப் பல்கலைக் கழகம் ஒப்புக் கொண்டது. இதற்கு உடனடியாகத் தமிழில் பல நூல்கள் எழுதப்பெற வேண்டிய இன்றியமையாமையும் எழுந்தது. திரு. சி. சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் திரு.ஜி.ஆர். தாமோதரன் அவர்களைத் தலைவராகக் கொண்டு அரசினரால் ‘கல்லூரித் தமிழ்க் குழு’ (College Tamil Committee) என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பெற்றது. அது பல்வேறு துறைகட்கென அமைக்கப் பெற்ற, உட்குழுக்களின் துணையால் பல்வேறு துறைக் கலைச் சொற்களை உருவாக்கியது. இவை யாவும் நூல் வடிவில் சென்னை மாநில அரசினரால் (1960இல்) வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றிலும் குறைகள் இல்லாமல் இல்லை. என்றாலும், நூல்கள் எழுதுவோருக்கு இவை துணையாக நிற்கும் என்பதற்கு ஐயம் இல்லை. நூல் எழுதுவோர், மாணாக்கர்கட்குக் கற்பிப்போர் இவர்களிடம் இச் சொற்கள் நன்கு செப்பமுற்று வருகின்றன. இங்ஙனம் அந்தந்த நேரங்களில் சில அவசர நிலைகளுக் கேற்ப வெளியிடப்பெறும் கலைச் சொல் அகராதிகளில் பல குறைகள் உள்ளன. இம்முயற்சிகள் விட்டுவிட்டு {{hws|hyph=|நடை|நடைபெறவிருக்கும்}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/94" இலிருந்து மீள்விக்கப்பட்டது