திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
No edit summary
 
வரிசை 13:
உயிரினும் ஓம்பப் படும் (01)
 
பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் விழுப்பம் தரலான் = ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்;
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் = அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
 
பரிமேலழகர் உரைவிளக்கம்: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போலஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.
 
==திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)==
வரிசை 27:
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;
:தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே = அறங்கள் பலவற்றையு்ம் ஆராய்ந்து இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாதென்று மனத்தை யொருக்கித் தேர்ந்தாலும் துணையாய் முடிவது அவ்வொழுக்கமே யாகலான்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.
வரிசை 40:
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் உடைமை குடிமை= எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடைமை குலனுடைமையாம்;
:இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் = அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கமுடையாராக உயர்குலத்தவராகலின், குடிமையாம் என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும், ஒழு்க்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தவராகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றும் கூறினார். உள்வழிப்படும் குற்றத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடின்றி எய்துதலின், அவ்விரைவுபற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.