திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை

George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்க்கை

வரிசை 21:

1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன்.

உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு

காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். [1]

2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன்.

வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது.
வரிசை 29:

நாங்கள் முத்திரையிடும்வரை

நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்"

என்று அவர்களிடம் கூறினார். [2]

4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைப்பற்றிச் சொல்லக் கேட்டேன்.

இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள்
வரிசை 68:

"இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்;

தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து

வெண்மையாக்கிக் கொண்டவர்கள். [3]

15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு

அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்;

அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா;

கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. [4]

17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்;

வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.

கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்." [5]

;குறிப்புகள்
[1] 7:1 = எரே 49:36; தானி 7:2; செக் 6:5.

[2] 7:3 = எசே 9:4,6.

[3] 7:14 = தானி 12:1; மத் 24:21; மாற் 13:19.

[4] 7:16 = எசா 49:10.

[5] 7:17 = திபா 23:1-2; எசா 25:8; 49:10; எசே 34:23.

வரி 93 ⟶ 101:

அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது

இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு

அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. [1]

4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து

வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.
வரி 99 ⟶ 107:

பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி,

மண்ணுலகின்மீது வீசியெறிந்தார்.

உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின. [2]

===முதல் நான்கு எக்காளங்கள்===
வரி 110 ⟶ 118:

நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது;

மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது;

பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது. [3]

8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
வரி 122 ⟶ 130:

உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று

வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள்

மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது. [4]

11 அந்த விண்மீனுக்கு 'எட்டி' என்பது பெயர்.

ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது.

இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர். [5]

12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
வரி 133 ⟶ 141:

இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது;

பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது.

இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று. [6]

13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன்.
வரி 139 ⟶ 147:

"மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள்.

அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!" என்று கத்தக் கேட்டேன்.

;குறிப்புகள்
[1] 8:3 = விப 30:1,3; ஆமோ 9:1.

[2] 8:5 = விப 19:16; லேவி 16:12; எசே 10:2; திவெ 11:19; 16:18.

[3] 8:7 = விப 9:23-25; எசே 38:32.

[4] 8:10 = எசா 14:12.

[5] 8:11 = எசே 9:15.

[6] 8:12 = எசா 13:10; எசே 12:7; யோவே 2:10,31; 3:15.