திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கை

George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்க்கை
வரிசை 24:

2 அது படுகுழி வாயிலைத் திறக்கவே,

பெரும் சூளையிலிருந்து புகை எழுவது போல் அக்குழியிலிருந்து புகை கிளம்பியது.

அப்புகையால் கதிரவனும் வான்வெளியும் இருண்டு போயின. [1]

3 புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் கிளம்பி நிலத்துக்கு வந்தன.

நிலத்தில் ஊர்ந்து திரியும் தேள்களுக்கு உள்ள ஆற்றல் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டது. [3]

4 நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல்,

தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு

அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது. [3]

5 ஆனால் அவர்களைக் கொல்லாமல்

ஐந்து மாதம் வரை வதைக்க மட்டும்
வரிசை 35:

தேள் மனிதரைக் கொட்டித் துன்புறுத்துவதுபோல் அவை அவர்களை வதைத்தன.

6 அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள்; ஆனால் சாக மாட்டார்கள்.

சாக விரும்புவார்கள்; ஆனால் சாவு அவர்களை அணுகாது. [4]

7 போருக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரைகளைப்போல் அந்த வெட்டுக்கிளிகள் காணப்பட்டன.

அவற்றின் தலைகளில் பொன் முடிகள் போன்றவை தென்பட்டன.

அவற்றின் முகங்கள் மனித முகங்கள்போல் இருந்தன. [5]

8 அவற்றின் முடி பெண்களின் கூந்தலையும்,

பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன. [6]

9 அவற்றின் மார்பில் இரும்பாலான மார்புக் கவசம் அணிந்திருந்தது போலத் தோன்றியது.

சிறகுகளின் இரைச்சல் போருக்கு விரையும் தேர்ப்படையின் இரைச்சல் போன்று இருந்தது. [7]

10 தேள்களைப் போல் அவை வாலும், கொடுக்கும் கொண்டிருந்தன.

ஐந்து மாதம் மனிதருக்குத் தீங்கு இழைக்கும் ஆற்றல் அவற்றின் வால்களில் இருந்தது.

11 படுகுழியின் வானதூதரே அவற்றுக்கு அரசன்.

அவருக்கு எபிரேய மொழியில் "அபத்தோன்" [8] என்றும்,

கிரேக்க மொழியில் "அப்பொல்லியோன்" என்றும் பெயர்.

வரிசை 57:

13 பிறகு ஆறாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.

அப்பொழுது கடவுள் திருமுன் இருந்த பொன் பலிபீடத்தின்

நான்கு கொம்புகளிலிருந்தும் எழுந்த ஒரு குரலைக் கேட்டேன். [9]

14 அக்குரல் அந்த வானதூதரிடம்,

"யூப்பிரத்தீசு பேராற்றின் அருகில் கட்டப்பட்டுக் கிடக்கும்
வரிசை 83:

கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட,

பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும்

வணங்குவதை அவர்கள் விட்டுவிடவில்லை. [10]

21 தாங்கள் செய்துவந்த கொலை, பில்லிசூனியம், பரத்தைமை,

களவு ஆகியவற்றை விட்டு அவர்கள் மனம் மாறவில்லை.

;குறிப்புகள்
[1] 9:2 = தொநூ 19:28.

[2] 9:3 = விப 10:12-15.

[3] 9:4 = எசே 9:4.

[4] 9:6 = யோபு 3:21; எரே 8:3.

[5] 9:7 = யோவே 2:4.

[6] 9:8 = யோவே 1:6.

[7] 9:9 = யோவே 2:5.

[8] 9:11 - "அபத்தோன்" என்னும் சொல்லுக்கு "அழிப்போன்" என்பது பொருள்.

[9] 9:13 = விப 30:1-3.

[10] 9:20 = திபா 115:4-7; 135:15-17; தானி 5:23.

வரி 111 ⟶ 124:

7 ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில்,

கடவுள் தம் பணியாளர்களான இறைவாக்கினர்களுக்கு அறிவித்திருந்தபடியே

அவரது மறைவான திட்டம் நிறைவேறும்" என்றார். [1]

8 விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி,
வரி 125 ⟶ 138:

10 உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன்.

அது என் வாயில் தேனைப் போல் இனித்தது;

ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. [2]

11 "பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர்,

மன்னர்பற்றி நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்"

என்று எனக்குச் சொல்லப்பட்டது.

;குறிப்புகள்
[1] 10:5-7 = விப 20:11; இச 32:40; தானி 12:7; ஆமோ 3:7.

[2] 10:8-10 = எசே 2:8-3:3.

(தொடர்ச்சி): [[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை|யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை]]