திருவிவிலியம்/பிற்சேர்க்கைகள்/விவிலிய வரலாற்றின் கால அட்டவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
"{{தலை | தலைப்பு = திருவிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:54, 2 மே 2013 இல் நிலவும் திருத்தம்

பிற்சேர்க்கைகள்

1. விவிலிய வரலாற்றின் கால அட்டவணை

இந்த அட்டவணையில் ("ஏ") என்னும் குறியீடு, அடுத்துத் தரப்பட்டுள்ள காலம் "ஏறக்குறைய" என்பதை உணர்த்தும். பொதுவாக முற்பகுதியில் குறிக்கப்படும் காலங்கள் ஓரளவு ஊகத்திற்குட்பட்டவை. சாலமோன் இறந்த கி.மு. 931ஆம் ஆண்டு தொடங்கி அதற்குப் பின் வரும் காலங்கள் துல்லியமாய் வரையறுக்கக் கூடியவை. இவையும் பல்வேறு ஆதாரங்களினின்று கணக்கிடப்படுவதால் ஒரு சில ஆண்டுகள் கூடக்குறைய அமைவதற்கு வாய்ப்புண்டு.

ஆண்டுக் காலம் நிகழ்ச்சி
வரலாற்றுக்கு முன்னைய நிகழ்ச்சிகள்

படைப்பு ஆதாம் - ஏவாள்
காயின் - ஆபேல்
நோவா - பெருவெள்ளம்
பாபிலோன் - கோபுரம்

கி.மு. 2000 இஸ்ரயேலரின் மூதாதையர்
  • ஆபிரகாம் கானான் நாட்டுக்கு வருதல் (ஏ) கி.மு. 1,900
  • ஈசாக்கு
  • யாக்கோபு
  • பன்னிரு குலத்தலைவர்கள்
  • யோசேப்பு எகிப்து மன்னனின் ஆலோசகர் ஆகுதல்

எகிப்தில் இஸ்ரயேலர்

  • யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல் (ஏ) 1,700 - 1,200
கி.மு. 1250
  • எகிப்தினின்று இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல் (ஏ) 1,250
  • இஸ்ரயேலர் பாலை நிலத்தில் பயணம் செய்தல்
  • மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறுதல்
கி.மு. 1200 கானான் நாட்டைக் கைப்பற்றி அதில் குடியேறுதல்
  • கானான் நாட்டைக் கைப்பற்றும் முதல் கட்டத்தில் யோசுவா தலைமை தாங்குதல். இஸ்ரயேலர் குலங்கள் கூட்டமைப்பாக விளங்குதல்.
  • "நீதித்தலைவர்கள்" தலைமை ஏற்றல்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு

  • சவுல் ஆட்சி (ஏ) 1,020 - 1,000
கி.மு. 1000
  • தாவீதின் ஆட்சி (ஏ) 1,000 - 962
  • சாலமோனின் ஆட்சி (ஏ) 962 - 931 (922)

இஸ்ரயேலின் இரண்டு அரசுகள்

யூதா (தெற்கு அரசு) இஸ்ரயேல் (வடக்கு அரசு)
  • ரெகபெயாம் 922 (931) - 915 (913)
  • அபியாம் 915 (913) - 913 (911)
  • ஆசா 913 (911) - 873 (870)
  • எரொபவாம் 922 (931) - 901 (910)
  • நாதாபு 901 (910) - 900 (909)
  • பாசா 900 (909) - 887 (886)
  • ஏலா 887 (886) - 876 (885)
  • சிம்ரி 876 (885) (7 நாள்கள்)
  • ஓம்ரி 876 (885) - 869 (874)
  • யோசபாத்து 873 (870) - 849 (848)
  • ஆகாபு 869 (874) - 850 (853)
  • யோராம் 849 (848) - 842 (841)
  • அகசியா 842 (841)
  • யோராம் 849 (852) - 842 (841)
  • அத்தலியா 842 (841) - 837 (835)
  • யோவாசு 837 (835) - 800 (796)
  • ஏகூ 842 (841) - 815 (814)
  • யோவகாசு 815 (814) - 801 (798)
  • அமட்சியா 800 (796) - 783 (781)
  • யோவாசு 801 (798) - 786 (782)
  • உசியா 783 (767)
  • எரொபவாம் 786 (782) - 746 (753)
  • செக்கரியா 746 (753) (6 மாதங்கள்)
  • யோத்தாம் 742 (740) - 735
  • சல்லூம் 745 (752) (1 மாதம்)
  • மெனகேம் 745 (752) - 738 (742)

பெக்காகியா 738 (742) - 737 (740)

  • ஆகாசு 735 - 715
  • பெக்கா 737 (740) - 732
  • ஓசேயா 732 (721) - (723/722)
  • எசேக்கியா 715 - 687 (686)
  • சமாரியாவின் வீழ்ச்சி 722
கி.மு. 722 யூதா அரசின் இறுதி ஆண்டுகள்
  • மனாசே 687 (686) - 642
  • ஆமோன் 642 - 640
  • யோசியா 640 - 609
  • யோவகாசு 609 (3 மாதங்கள்)
  • யோயாக்கிம் 609 - 598
  • யோயாக்கின் 598 (3 மாதங்கள்)
  • செதேக்கியா 597
  • எருசலேமின் வீழ்ச்சி: ஜூலை 587/586

நாடு கடத்தப்படலும் தாய்நாடு திரும்பி வரலும்

கி.மு. 587/86
  • பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல்

பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சி

கி.மு. 538
  • யூதர்கள் தாய்நாடு திரும்ப மன்னன் சைரசு அனுமதி அளித்தல் 538
  • புதிய கோவிலுக்கு அடித்தளமிடல் 537
  • எருசலேமின் மதில்களைச் செப்பனிடல் 445 - 443

பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி

கி.மு. 333
  • பேரரசர் அலக்சாந்தர் பாலஸ்தீனில் கிரேக்க ஆட்சியை நிறுவுதல் 333
  • எகிப்தை வென்ற அலக்சாந்தரின் படைத்தளபதிகளுள் ஒருவரின் வழிமரபினரான தாலமியர் பாலஸ்தீனை ஆட்சி புரிதல் 323 - 198
  • சிரியாவை வென்ற அலக்சாந்தரின் படைத் தளபதிகளுள் ஒருவரின் வழிமரபினரான செலூக்கர் பாலஸ்தீனை ஆட்சி புரிதல் 198 - 166

மக்கபேயர்

கி.மு. 166
  • யூதா மக்கபேயின் தலைமையில் யூதர்கள் கிளர்ந்தெழல். யூதாவின் குடும்பத்தினரும் வழிமரபினருமான அஸ்மோனியர் (மக்கபேயர்) பாலஸ்தீனை ஆட்சி புரிதல் 166 - 63.

உரோமை ஆட்சி

கி.மு. 63
  • உரோமைப் படைத்தளபதியான போம்பே எருசலேமைக் கைப்பற்றல் (கி.மு. 63)
  • பெரிய ஏரோது (கி.மு. 37 - 4) உட்பட உரோமையரால் நியமிக்கப்பட்டோர் பாலஸ்தீனை ஆட்சி புரிதல்.

புதிய ஏற்பாட்டின் காலம்

கி.பி. 1
  • இயேசுவின் பிறப்பு (ஏ) கி.மு. 6/5
  • திருமுழுக்கு யோவானின் திருப்பணி
  • இயேசுவின் திருமுழுக்கு - திருப்பணியின் தொடக்கம் (ஏ) கி.பி. 27.
  • இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் (ஏ) கி.பி. 30
  • பவுல் (சவுல்) திருத்தூதரின் அழைப்பு (ஏ) கி.பி. 33/35
  • எருசலேம் சங்கம் (ஏ) கி.பி. 49
  • திருத்தூதர் பவுல் கொல்லப்படல் கி.பி. 64/67
கி.பி. 70 எருசலேமின் அழிவு (கி.பி. 70)
கி.பி. 95 பத்மு தீவில் யோவான்


(விவிலிய வரலாற்றின் கால அட்டவணை நிறைவுற்றது)


(தொடர்ச்சி): பிற்சேர்க்கைகள்:விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும்