பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 560:
 
நற்றமிழர்க் கெழில் மூச்சு! (3:2)
 
== ==
மேலவர் கீழவர் இல்லை - இதை
 
மேலுக்குச் சொல்லிட வில்லை
 
நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள்
 
நாலா யிரத்தவர் காணத்
 
தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும்
 
தோழர் சமைத்ததை உண்பார்
 
மேலும்அப் பாரதி சொல்வார் - "சாதி
 
வேரைப் பொசுக்குங்கள்" என்றே. (3:3)
 
== ==
செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்
 
சீருக்கு நல்லதோர் தொண்டும்
 
நிந்தை இலாதவை அன்றோ! - எந்த
 
நேரமும் பாரதி நெஞ்சம்
 
கந்தையை எண்ணுவ தில்லை - கையிற்
 
காசை நினைப்பதும் இல்லை
 
செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல
 
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார் (3:4)
 
 
பாரதிதாசனின் '''பாரதி உள்ளம்''' என்ற பாடல் முடிந்தது.
 
 
இப்பாடல்கள் நான்கும் எழுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.
 
இப்பாடல்களின் அடிகள் மொத்தம் 16 (பதினாறு மட்டும்)ஆகும்.
 
இது இசைப்பாடலாகப் பாட ஏற்றது.
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது