பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/264: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:50, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J62 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று காட்டுகின்றார். முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு என்பதற்கிணங்கத் தன் காதல் வெளிப்பட்டவுடன் தன் முடிவை அச்சமில்லாமல் உறுதியுடன் கூறி விடுகின்றாள். இத்தகைய உறுதி பெண்களுக்கு வேண்டும்; ஆண்களுக்கும் வேண்டும். பெற்றோரும் காதல் மணத்தை ஆதரித்தல் வேண்டும் என்பதனை, எங்கள் பெரிய பிள்ளை காதல் கெஞ்சினிலே வாழுகின்ற வஞ்சியை எம் சொத்தெல்லாம் தந்தேனும் தோதுசெய மாட்டோமா? -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பகுதி 3, ப. 25. என்று வரும் மணவழகன் கூற்றாலும் மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான்' என்று வரும் பகுதியாலும் உணர்த்துகின்றார். தங்கள் பிள்ளைகளின் காதலுக்காகப் பெற்றோர்கள் தங்கள் பகையையும் மறப்பதாக அல்லவா காட்டுகின்றார். இத்தகைய மாற்றம் பெற்றோரிடம் ஏற்படுதல் வேண்டும். காதல் மனத்தின் சிறப்பினை எல்லாம் எடுத்துக் கூறிவந்த பாவேந்தர் மனம் பொருந்தா மணத்தைக் கடிகின்றார். அறுபது வயது முதியவருக்கு இருபது வயது மங்கையை மணம் முடித்துவைத்தால் என்ன நிகழும் என்பதனை மூடத்திருமணம்' என்ற பாடலில் உள்ளக் கொதிப்புடன் வெளியிடுகின்றார். இம்மூடத்திருமணத்தால் உள்ளக் கொதிப்புண்ட புரட்சிக்கவியின் உள்ளத்தில் இருந்து பீரிட்டெழுகின்றது, மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக! மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போகவே! சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!