பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/265: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:50, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 263 நீங்கள், மக்கள் அனைவரும் ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, 111. என்ற சொற்கள். இத்தகைய சமூகச் சட்டமும், வழக்கும் நாட்டை விட்டு ஒழிந்தால்தான் காதல் மணம் எங்கும் மணக்கும். காதலின் முன்பு சாதி இல்லை; சமயம் இல்லை; உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு இல்லை என்று கூறும் பாவேந்தர், காதலில் தமிழ் வேண்டும் என்கின்றார். தான் காதலிக்கும் பெண் தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும் என்கின்றார். இது ஒரு புரட்சிக் கருத்து. என்மீதில் ஆசை வைக்காதே-மயிலே என்னைப் பார்த்தும் சிரிக்காதே உன்மேல் நான் ஆசை வைக்கவில்லை- தோன் உண்மையிலே தமிழ்மகள் இல்லை ஆதலால் -பாரதிதாசன், காதறபாடல், ப. 70, என்று காதலில் தமிழை மட்டும் போற்றுகின்றது அப்புரட்சிக் கவியின் உள்ள ம். இல்லற வாழ்வில் நீடித்த இன்பம் நிலைக்க வேண்டு மானால் குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்று அன்றே எடுத்துக் கூறினார். காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1. ப. 40. என்கின்றார். இப்பாட்டில் காதலைக் கட்டுப்படுத்திக் குழந்தையைக் கட்டுப்படுத்துவது, எல்லார்க்கும் கடை போகாது என்பதை அழகாகச் சொல்லிக் காதலைக் கட்டுப் படுத்தாமலே குழந்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் - முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கினார்' .'" இன்று