பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/266: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:50, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நமது அரசு இதனை ஏற்றுத் தீவிரமாகக் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் வாழ்வில் இன்பம் பெருக வழிவகை செய்கின்றது. கலப்பு மணம் கலப்பு மனம் காதலை மையமிட்டது. காதல் இல்லாமல் கலப்பு மணம் இல்லை. கலப்பு மணம் காலத்தின் தேவை. தமிழர்கள் சாதி, சமயங்களால் பிளவு. பட்டுப் பன்னெடுங்காலமாகவே ஒற்றுமை இல்லாமல் துன்புறுகின்றனர். அவர்களிடையே உண்மையான ஒற்றுமை நிலவ வேண்டின் கலப்பு மணம் நாட்டில் பெருகுதல் வேண்டும். அறிவியல் அடிப்படையிலும் கலப்புமணம் சிறந்தது. கலப்பு மணத்தின் மூலம் ஒன்றிணைந்த ஆண் பெண்களின் குழந்தை, உடல் உறுதி உடைய குழந்தையாக, அறிவு: வளர்ச்சி மிகுந்த குழந்தையாக விளங்கும் என்று அறிவியல் முறைப்படி மெய்ப்பித்துள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்கனி என்பதுபோல் கலப்பு மணம் என்ற ஒன்றினால் தமிழர்களின் ஒற்றுமை, அறிவு மிகுந்த குழந்தை என்ற இரண்டு கண்களையும் பெறலாம். எனவே காதல் மனத்திலும் கலப்பு மணமே சிறந்தது. காதல் மணம் சாதி சமயங்களைக் கடக்காமலும் நடைபெறும். ஆனால் கலப்பு மனம் இவற்றைக் கடந்தது. காதல் மணத்தையும் உள்ளடக்கியது. எனவே எந்நிலையில் நோக்கினும் கலப்பு மணம் சிறந்தது, தேவையானது. பாவேந்தர் கலப்பு மணத்தைப் பெரிதும் ஆதரிக் கின்றார். காதலுக்குச் சாதி மதம் குறுக்கிடுவதை நகைப்புக் குரியது என்கின்றார். சந்தனச் சோலைநான் தோழி-தென்றல் தழுவத் தழுவினேன் தோழி அந்தச் செயல்கேட்ட பெற்றோர்- அவன்