பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/267: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:51, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 265 ஆர்? அவன் எச்சாதி என்றார்: இந்தாடி அன்புள்ள தோழி-எனக்கு எப்போது அடங்கும் சிரிப்பு? வந்தவன் ஆண்சாதி என்றால்-அவனை மணந்தவள் பெண்சாதி தானே? -பாரதிதாசன், காதற் பாடல்கள், ப. 170. ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி மற்ற வேறுபாடுகள் இருத்தல் கூடாது. சாதிக் கட்டுப்பாடு, சமயக் கட்டுப் பாடு, பொருள் வேட்கை முதலியவற்றான் எத்தனையோ பொருந்தா மணங்கள் நடைபெறுகின்றன. கட்டுப்பாடு களுக்குக் கட்டுப்பட்டு எத்துணை நாள் உயிர்வதை செய்து கொண்டிருப்பது! கட்டுப்பாடுகள் என்னென்ன செய் கின்றன! அந்தோ! விரிக்கிற் பெருகும். எனவே இக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து ஆண்களும் பெண்களும் கலப்பு மணம் புரிதல் வேண்டும். இந்நிலையில் உலகம் என்ன சொல்லும், ஊரார் என்ன சொல்வர் என அச்சப்படுதல் கூடாது. இது தேவையற்ற அச்சம். இவ்வச்சம் நீங்கிய ஒரு பெண் கூறுகின்றாள். காதலை அறியாக் கயவர் கூட்டம் கண்டதை எல்லாம் கத்தட்டும்! மோதும் அலையில் உப்பைக் கொட்டும் மூடர்கள் ஏதும் செய்யட்டும்! இளமை என்னும் அருவிப் பெண் நான் இளைஞன் என்னும் பேராற்றில் உளங்கொண்டாடி என்னை இழந்தேன் ஊராராம் நாய் குலைக்கட்டும். -பாரதிதாசன், காதற் பாடல்கள் ப. 60. மணவாளனைத் தேர்ந்தெடுக்கும்போது ஒழுக்கம் உடையவனா, கல்வி உடையவனா, உயிர்களிடத்து பா-17