பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/275: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:52, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 273 இதனைக் கண்ட பாவேந்தர் கொதித்தெழுகின்றார். அக்கொதிப்பின் விளைவே குழந்தை மணத்தின் கொடுமை’ (தொகுதி 1, பக். 34) என்ற பாடலாக உருப்பெற்றது. அப் பிஞ்சுக் குழந்தையின் நிலையையும் உள்ள எண்ணத்தையும் வெளியிடுகின்றார். அது, கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு தாவாச் சிறுமான் மோவா அரும்பு தாலியறுத்துத் தந்தை வீட்டில் இருந்திடும் நிலையைக் காட்டி, அதே வீட்டில் அவளைப் பெற்றெடுத்த தந்தை, மனைவி இறந்ததால் மறுமணம் செய்து மனைவியோடு இன்ப வாழ்வினை ஏற்று மகிழ்ந் திடும் நிலையினையும் காட்டுகின்றார். தந்தையின் இச் செயலை அனுமதிக்கும் சமுதாயம், இல்லற இன்பத்தின் இயல்பினையே அறியாத நிலையில், இல்லறம் ஏற்கும் தகுதியை இழந்ததாகச் சிறுமி ஒருத்தியைச் சிறுமைப் படுத்தும் சிந்தையற்ற செயலை எப்படி அனுமதிக்கின்றது என்பதுவே பாவேந்தர் எழுப்பும் வினா. வயது முதிர்ந்த நிலையிலும் இளைய மனைவியோடு இன்ப வாழ்வு நடத்தத் துடிக்கும் தந்தை, தன் மகளின் இந்த அவல நிலையினை எந்த அடிப்படையில் அனுமதிக்கின்றான்? இல்லற வாழ்வின் நுட்பத்தை அறியமுடியாத குழந்தைப் பருவத்திலேயே, சிற்றன்னைக்குப் பூச்சூட இன்ப இரவை எதிர்பார்க்கும் தந்தையின் இழிசெயல் கண்டு வெறுப் படைகின்ற இக்குழந்தை, வாழ்வுக்குரிய பக்குவம் வந்த பிறகு தனிமைத் துன்பத்தை எப்படித் தாங்கப் போகின்றாள் என அவள் பாட்டி அழுது புலம்புவதாகக் கூறிக் கவிதையை முடிக்கின்றார் . குழந்தைப்பருவம் இல்லறத்திற்கு ஏற்றதன்று என்பதனை, தீயன கல்லன காணாத இப்பருவத்தே-ஒரு சேயிழையோடு அறம் செய்வது எவ்வாறு உளம் ஒத்தே -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3. ப. 21.