பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/277: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:52, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 275, பாவேந்தர் அவர்கள் பொதுவுடைமை அரசையும் குடியரசையும் ஆதரிக்கின்றார். அதாவது பொது வுடைமைக் குடியரசு (சோசலிச ஜனநாயக அரசு) வேண்டும் என்கின்றார். நடைமுறையில் இருக்கும் ஆண்டான் அடிமை முறையையும் தனியுடைமையால் ஏற்படும் தீமை யையும் எடுத்துக்காட்டி அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எடுத்துக் கூறுகின்றார். இத்துன்பங் களில் இருந்து தொழிலாளர் விடுபட வேண்டுமானால் அவர்கள் முதலில் ஒன்றுபடுதல் வேண்டும் என்று கூறி, ஒன்றுபட்ட பின்பு புரட்சி செய்து நாட்டில் பொது வுடைமைக் குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்கின்றார். ஆண்டான் அடிமை பண்ணையில் வேலையாட்களை அடிமைகள் போல் நடத்தினர். அவர்கள் உழைப்பை உறிஞ்சித் தன் நிலையை உயர்த்திக் கொண்டனர் பண்ணையார்கள். இந்நிலை நீடித்திருந்தால் அம்மக்களின் நிலை என்ன? அதனை, தங்கள் வாழ்வையும் ஆண்டானின் வாழ்வையும் ஒப்பிட்டு ஒரு வேலையாள் பாடுவதாக அமைந்த பாடலில் அமைத்துக் காட்டுகின்றார் பாவேந்தர். பாடே படுவர்க்குக் காடோ கரிக்கலோ கண் மூடாமல் களம் காப்பே-ஆண்டை மனைவி போடட்டும் பவுன் காப்பே பாதிரத்தம் சுண்டு மட்டும் பாடுபட்டுச் சாகும் மக்கள் மீது வைக்க ஏது காசு-கல்லாண்டியாரின் மோதிர மெல்லாம் நகாசு கையலுத்துக் காலலுத்துக் காலமெல்லாம் உழைப்பவர் கண்ட தில்லை ஒரு தானம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, பக். 169-70.