பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/279: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:52, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 277. பெருங்காயம் ஒரு பெட்டி வைத்திருப்uோன் பிள்ளை பெற்றவளுக்கும் இல்லையே என்பான் ஒரு கிழமை போனால் விலையேறிற் றென்பான் ஒழிய வேண்டும் தனித்துறை வாணிகம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 154, என்று தனியாரிடத்து இருக்கும் வணிகத்தை ஒழித்து, எள் முதல் அரசினர் கொள்முதல் செய்க எப்பாங்கும் கடைவைத்து விற்பனை செய்க கண்படாது சரக்கைப் பதுக்கும் கயவர் எதிர்ப்பைக் கழன்றுமிழ்ந் திடுக -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 154. என்று கூறுகின்றார். இன்று அரசு இதனை ஏற்று ஒவ்வோர் ஊருக்கும் கூட்டுறவுப் பண்டகசாலை’ வைத்தும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்' வைத்தும் பாவேந்தரின் கனவை நனவாக்கிக் கொண்டு வருகின்றது. வீடுகள்தோறும் சென்று மக்களுக்குத் தேவையான வினைகளை முடித்து அவர்கள் தரும் கூலியைப் பெற்று சிலர் வாழ்கின்றனர். வீடுகள்தோறும் சென்று வணிகம் நடத்தியும் சிலர் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் எவர்சில்வர் பாத்திரம் விற்பவர். இவர்கள் வீடுகளுக்குச் சென்று பழந்துணிகளை வாங்கிக்கொண்டு அதற்குத் தக்க எவர்சில்வர் பாத்திரங்களைத் தருவர். பண்டமாற்று. முறையில் நடைபெறும் வணிகம் இது. இவ்வணிகத்தில் நடைபெறும் சீர்கேட்டினை எடுத்துக் கூறுகின்றார். எவர்சில்வர் என்று கூறி இல்லாத வரிடம் உலாவித் தவறாமல் சொக்குப்பொடித் தூவிக் - கேட்பான் தட்டைக் கொடுத்துப் பட்டுச்சேலையைப் பாவி. -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 163.